• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-10 17:10:55    
தாஜிக் இன மக்களின் நாட்டுப்பற்று உணர்வு

cri

தாஜிக் இன ஆடல்

வழிகாட்டியாக இருக்கும் போது ஆபத்து நிறைய உண்டு. கைமாறுமில்லை. இந்நிலையில் ஏன் வழிகாட்டியாகச் செயல்பட வேண்டும் என்று செய்தியாளர் கேட்டார்.

"துவக்கத்தில் முக்கியமாக, எனது தாய் தந்தை ஆகியோரின் காரணம் நான் இவ்வாறு செய்தேன். அப்போது எனது தந்தை, எல்லை காவல் ரோந்து படைக்கு வழிகாட்டியாக கடமை புரிந்தார். பின்னர், வயது கூடுதலாகிய போது நான் அவருக்குப் பதிலாக வழிகாட்டியாக பணிபுரியத் துவங்கினேன். அந்நாட்களில் நான் அதிகம் புரிந்து கொள்ளவில்லை. அவரது செல்வாக்கினால் இவ்வாறு செய்தேன். பின்னர், விடுதலை படையின்றி, எங்களுக்கு இவ்வளவு இன்ப வாழ்வு இல்லை என்று புரிந்து கொண்டேன். நான் செய்யும் பணி, மிகவும் புகழ்மிக்க பணி என நான் அறிந்துள்ளேன்" என்று அவர் பதிலளித்தார்.

தாஜிக் இனத்தவர்களில் நாட்டுப்பற்றுணர்வுடன் எல்லை காவல் பணி புரிவதில் அசல் உதாரணமாக விளங்கும் Bayakக்கு, 2005ம் ஆண்டு மே திங்களில் நடைபெற்ற தேசிய இன ஒற்றுமை முன்னேற்றம் பற்றிய நான்காவது தேசிய பாராட்டு கூட்டத்தில் முன்னேறிய தனிநபர் என்ற புகழ்மிக்க பட்டம் வழங்கப்பட்டது. பெய்சிங்கு போய் பரிசு பெறுவது பற்றி அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறியதாவது:

"பெய்சிங் போகும் முன், உறவினர்களும் நண்பர்களும் கிராமவாசிகளும் என்னை அனுப்பி வைத்தனர். பரிசு பெறும் போது, எப்படியாயினும் இப்பணியைத் தொடர்வேன். ஏனெனில், எனது பணி சிறப்பு புகழ்மிக்கது என நினைத்தேன்" என்றார், அவர்.

தாஜிக் இன ஆடல்

தனது மகனும் இப்பணியைக் கையேற்ற வேண்டும் என்றும் அவர் விரும்புகின்றார்.

உண்மையிலேயே, அவரது மகன் Mehpiret, தந்தைக்குப் பதிலாக வழிகாட்டியாக இருந்தார். செய்தியாளரிடம் பேசுகையில், தந்தையின் பணியை தொடர விருப்பதாக அவர் கூறினார்.

"இது, தாய்நாட்டின் உரிமைப்பிரதேசத்தின் ஒரு பகுதி. தேசிய இன குடும்பத்தின் ஒரு உறுப்பினர் என்ற முறையில், காவல் புரியாவிட்டால், யார் செய்வார்" என்றார், அவர்.

நாட்டுப்பற்றுணர்வு, தற்போது தாஜிக் இன மக்களின் ரத்தத்தில் சேர்ந்துள்ளது. தாஜிக் இன மக்கள் ஒவ்வொருவரும் தாய்நாட்டைப் பாதுகாப்பது சொந்த பொறுப்பு என கருதுகின்றார்.


1  2  3