• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-08 09:35:27    
ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள ஐ.நா. அமைதி காப்பு படையில் பணியாற்றும் ஒரு சீனர்

cri

ஆப்கான் போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த 4 ஆண்டுகளில் ஆப்கான் அரசு மற்றும் மக்களின் பெரும் முயற்சியுடன், அந்த நாட்டை சீரமைக்கும் முயற்சியில் பெரும் முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. இந்த முன்னேற்றத்தைப் அடைவதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவும் உதவியும் இன்றியமையாதது. குறிப்பாக, ஐ.நா. அமைதி காப்பு படை ஆற்றிய பங்கை ஆப்கான் மக்கள் எளிதில் மறக்கப் போவதில்லை. இப்படையில் பணியாற்றும் சீன காவல் துறையினர் ஆப்கான் மக்களின் மனதில் ஆழப்பதிந்திருக்கின்றனர்.

"ஆப்கானின் பாதுகாப்பை வலுப்படுத்த ஐ.நா. அமைதி பாதுகாப்பு படை இங்கு வந்தது. நமது நாடு பாதுகாப்பாக இருக்கும் போதுதான், சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் தடையின்றி நடைபெற முடியும். ஐ.நா. பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காவல் துறையினரில் சீனாவின் காவல் துறையினர் மிகவும் சிறப்பாகச் செயல்படுகின்றனர் என நான் சொல்ல வேண்டும். சீனாவின் காவல் துறையினர் ஆக்கபூர்வமான மற்றும் முக்கியமான பங்காற்றி வருகின்றனர் என்பதில் ஐயமில்லை" என்று காபூல் நகரில் வேலை செய்யும் ஒரு பொறியாளரான அப்துல்காதி சீனக் காவல் துறையினரை வெகுவாக பாராட்டினார். காபூல் நகரில் ஐ.நா. காவல் துறைக்கு ஆலோசகராக வேலை செய்யும் சீனக் காவல் துறை அதிகாரி சியூ சுங் வென்னை அண்மையில் எமது செய்தியாளர் சந்தித்தார். இன்றைய நிகழ்ச்சியில் அவரின் அனுபவங்கள் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன்.

30 வயதான சியூ சுங் வென் உயரமானவர் அல்ல. ஐ.நா. அமைதிக் காப்புப் படையின் காவல் துறைச் சீருடையை அணிந்ததும், அவர் கம்பீரமாகத் தோன்றுகிறார். செய்தியாளரிடம் சியூ சுங் வென் பேசுகையில், 2005ஆம் ஆண்டு மே திங்களில், ஐ.நாவின் கோரிக்கைக்கிணங்க, சீன பொது பாதுகாப்பு அமைச்சகத்தினால் தாம் ஆப்கானுக்கு அனுப்பப்பட்டு, ஐ.நா. காவல் துறையின் ஆலோசகராக ஓராண்டு கால அமைதிக் காப்புப் பணியைச் செயல்படுத்தத் துவங்கியதாக கூறினார். ஐ.நா. அமைதிக் காப்புப் பணியில் அவர் ஈடுபடுவது இது முதல்முறை அல்ல. போரினால் ஏற்பட்ட துன்பங்களையும் அதற்குப் பின் வரும் வறுமையையும் அவர் நன்கு அறிந்துள்ள போதிலும், போருக்குப் பிந்திய ஆப்கானிஸ்தானின் நிலைமை அவருக்கு அதிர்ச்சி தந்தது.

"விமானத்திலிருந்து கீழே பார்த்தால், ஆப்கானிஸ்தான் முழுவதும் மனித நடமாட்டம் தெரிவதில்லை. எங்கெங்கும் மொட்டையாக உள்ளது. விமானம் காபூல் வான் எல்லையில் நுழைந்த போது, இடிபாடுகள் நிறைய காணப்பட்டன. மனித குலம் சில நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது போல் தோன்றியது. இது, இந்நகர் எனக்கு தந்த முதலாவது தோற்றமாகும்" என்றார் அவர்.

1  2  3