• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-08 09:35:27    
ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள ஐ.நா. அமைதி காப்பு படையில் பணியாற்றும் ஒரு சீனர்

cri

சியூ சுங் வென்னின் பணி, ஆப்கான் அரசு மற்றும் ஐ.நாவின் தொடர்பான வாரியத்தின் பாராட்டை பெற்றுள்ளது. 2005ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில், அவருக்கு ஐ.நா. சமாதானப் பதக்கம் வழங்கப்பட்டது.

தமது பணி மூலம் ஆப்கான் மக்களின் நன்மதிப்பைப் பெற்று, இருநாட்டு மக்களுக்கிடையே நட்புறவை ஆழமாக்குவது அவருக்கு மகிழ்ச்சி மற்றும் பெருமையைத் தருகிறது. அவர் கூறியதாவது—

"ஆப்கானிஸ்தான் சீனாவின் அண்டை நாடாகும். அதன் சீரமைப்புக்கு உதவியாக, அமைதிக் காப்புப் படைவீரர்களை அனுப்புவது, சீனாவின் நலனுக்கு ஏற்றது மட்டுமல்ல, வட்டாரத்தின் நலனுக்கும் ஆப்கானின் நலனுக்கும் பொருத்தமானது. ஆப்கான் மக்கள் சீனர்களுடன் நட்புடன் பழகுகின்றனர்" என்றார் அவர்.

நட்பான அண்டை நாடான சீனா, ஆப்கானின் சமாதான சீரமைப்பில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. காவல் துறை அதிகாரி சியூ சுங் வென்னும், அதில் பங்கு ஆற்றியுள்ளார். ஆப்கானிலுள்ள சீனத் தூதர் லியூ ஜியான் பேசுகையில், ஆப்கானின் சீரமைப்பில் சீனாவின் உதவி, ஆப்கான் மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது என்று கூறினார்.

"சீனா பல வழிகளில் ஆப்கான் சீரமைப்பில் பங்கெடுக்கிறது. மேலும், சீன மக்கள் உயிர் தியாகம் செய்து ஆப்கானுக்கு ஆதரவு அளிக்கின்றனர். சீனாவின் உதவி, நீண்டகாலத்திற்கானது, தன்னலமற்றது, எந்த நிபந்தனையும் இல்லை. தனக்கு உதவியாக சீனா இயன்றதனைத்தையும் செய்கிறது என்று ஆப்கானிஸ்தான் கருதுகிறது. எங்கள் அண்டை நாடாக சீனா இருப்பது கண்டு பெருமை அடைகின்றோம் என்று ஆப்கான் மக்கள் கூறுகின்றனர்" என்றார் அவர்.


1  2  3