
ஐ.நா. காவல் துறையின் ஆலோசகராக, அதிகாரி சுயூ சுங் வென்னின் முக்கிய கடமை, ஆப்கான் காவல் துறையின் சீர்திருத்தத்துக்கும் சீரமைப்புக்கும் உதவி வழங்குவதாகும். பல்வகை இதர சீரமைப்புப் பணிகளை போல், ஆப்கான் காவல் துறையின் சீரமைப்பு பணி மிகவும் கடினமாக உள்ளது. சுயூ சுங் வென் கூறியதாவது—
"காவல் துறை விவகார சீர்திருத்தம், அரசியல் சீரமைப்பின் ஒரு பகுதியாகும். இதர வளர்ச்சி போல், பாதிக்கப்பட்ட அனைத்துத் துறைகளையும் மீண்டும் வளர்க்க வேண்டியுள்ளது" என்றார் அவர்.

ஆப்கானின் சமாதான சீரமைப்புக்குத் தேவையான அமைதியான சூழலை உருவாக்குவதற்கு, காவல் துறையின் சீர்திருத்தம், உடனடிக் கடமையாகும். ஆப்கான் காவல் துறையின் நடப்பு நிலைமையை அறிந்து கொள்ள, சுயூ சுங் வென் பயங்கரவாத தாக்குதலின் ஆபத்தையும் பொருட்படுத்தாமல், கிழக்கு ஆப்கானில் தாம் பொறுப்பேற்கும் 4 மாநிலங்களுக்குச் சென்றார். அங்குள்ள 10க்கும் அதிகமான காவல் நிலையங்களிலும் கிளைகளிலும் நேரடி தகவல்களை சேகரித்த பின், ஆப்கான் அரசிடமும் ஐ.நாவிடமும் நடைமுறைக்கு ஏற்ற யோசனைகள் பலவற்றை அவர் முன்வைத்தார். உள்ளூர் காவல் துறையினர் பலருக்கும் அவர் பயிற்சி அளித்தார். அவர் உள்ளிட்ட ஐ.நா. ஆலோசர்களின் உதவியுடன், ஆப்கான் காவல் துறையின் சீர்திருத்தம் மற்றும் சீரமைப்பு பணியில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டில் ஆப்கான் நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போது காவல் துறை ஆற்றிய முக்கிய பங்கு பற்றி சுயூ சுங் வென் சிறப்பாக குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது, சியூ சுங் வென்னும் இதர ஐ.நா. ஆலோசகர்களும் தேர்தல் நடைபெற்ற இடங்களுக்குச் சென்றனர். உள்ளூர் காவல் துறை, நிர்வாகம், ராணுவம் ஆகியவற்றை உள்ளடக்கி அவர்கள் உருவாக்கிய கூட்டு ஆணையம், பயனுள்ள முறையில் அவசர நிகழ்ச்சிகளை சமாளித்தது. இதன் விளைவாக, அந்தத் தேர்தல் தடையின்றி நடைபெற்றது.
1 2 3
|