
கடந்த ஜுலை 5ஆம் நாள், Chen Ping என்னும் 40 வயதான மூன்று சக்கரவாகன ஓட்டுநரைப் பொறுத்த வரை, ஒரு சிறப்பான நாள். கடந்த 20 ஆண்டுகளாக, சளையாத முயற்சிகளின் மூலம், முதுகலைக் கல்விக்கான சேர்க்கைக் கடிதத்தை அவர் இறுதியில் பெற்றார்.
கடந்த ஏப்ரல் திங்களில், யுன்னான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதுகலைக்கல்விக்கான நேர்முகத் தேர்வில், தேர்வர் ஒருவர், தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். யுன்னான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், தேர்வாளர்களில் ஒருவருமான Lin Chao Min இது பற்றிக் கூறியதாவது:
"சில வினாக்களைக் கேட்டேன். அவரின் துறை சார்ந்த சிறப்பு அறிவு சிறந்தது. தவிர, அவருக்கு ஆர்வம் உண்டு. அவரின் ஆர்வத்தையும் முயற்சியையும் நான் பாராட்டுகின்றேன்." என்றார் அவர்.
Chen Pingவின் சிறந்த செயல் திறன், தேர்வாளர்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளது. நேர்முக தேர்வுக்கு பின், யுன்னான் பல்கலைக்கழகத்திலிருந்து தேசிய இன வரலாறு கற்பதற்கான சேர்க்கைக் கடிதத்தை அவர் பெற்றார். கடந்த 6 ஆண்டுகளாக, வட கிழக்கு சீனாவின் Ji Lin மாநிலத்தின் Jiu Tai என்னும் சிறு நகரில், அவர் மூன்று சக்கரவாகன ஓட்டுநராக வேலை செய்தார்.
மூன்று சக்கரவாகன ஓட்டுநர், முதுகலை மாணவராக எவ்வாறு மாறினார்?
1 2 3
|