
1986ஆம் ஆண்டு, சீனியர் பள்ளியிலிருந்து பட்டம் பெற்ற Chen Ping உயர் கல்வி நிலையங்களுக்கான நுழைவு தேர்வில் கலந்து கொண்டார். அவர் உயர் மதிப்பெண் பெற்றார். சீனாவில் புகழ் பெற்ற பெய்சிங் பல்கலைக்கழகம் அந்த ஆண்டு விதித்த மதிப்பெண் மரம்பை அவர் பெற்ற மதிப்பெண் தாண்டியது. ஆனால், அவர் தெரிவு செய்த Ren Min பல்கலைக்கழகத்தின் மதிப்பெண் வரம்பு மேலும் உயரமானது. இறுதியில், இந்த இரண்டு பல்கலைக்கழகங்களிலும் அவரால் சேர முடியாமல் போயிற்று.
Chen Pingஐப் பொறுத்த வரை, இந்த எதிர்பாராத தாக்கம் கடுமையானது. நீண்டகாலமாக, இது, அவரின் மனதில் ஒரு நிழலாகப் படிந்திருந்தது. அப்போது முதல், முதுகலை கல்வியைப் படித்தே தீர்வது என்ற மேலும் உயரிய குறிக்கோளை அவர் உறுதிப்படுத்தினார்.
Chen Ping முதுகலை மாணவராக விளங்குவதற்கு நீண்டகால கடினமான உழைப்பு தேவைப்படும். அவரின் குடும்பம் ஏழைக் குடும்பம். அவர் வேலை செய்து கொண்டே கல்வி கற்க வேண்டும். அவர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டாலும், முதுகலைக் கல்விக்கான நுழைவு தேர்வு கடினமானது. Chen Ping பல முறை தோல்வியடைந்தார். இது மட்டுமல்ல, 2000ஆம் ஆண்டில் அவர் வேலை செய்த தொழில்சாலை திவாலானது. வருமானத்தை இழந்த அவர், மூன்று சக்கரவாகன ஓட்டுநராக வேலை செய்ய வேண்டியிருந்தது. படிப்படியாக, இந்த பணியின் பயனை Chen Ping உணர்ந்து கொண்டார். பணத்தை சம்பாதிக்கலாம். அது மட்டுமல்ல, முதுகலைக் கல்வியைப் பெறும் கனவை நனவாக்குவதற்கு, நூல்களை படிக்க கூடுதல் நேரம் அவருக்கு கிடைத்துள்ளது.
"மூன்று சக்கர வாகனத்தின் பக்கத்தில் நூல்களை நான் படிக்கலாம். வேலை இல்லாத நேரத்தில், வாகனத்தின் பக்கத்தில், ஒரு கையால் வாகனத்தைப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையில் நூலை எடுத்துக்கொண்டு படித்தேன்." என்றார், அவர்.
1 2 3
|