• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-15 09:43:12    
மூன்று சக்கரவாகன ஓட்டுநர் Chen Ping

cri

Chen Ping நூல்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். இது பற்றி அவருடைய சகாக்கள் அனைவருக்கும் தெரியும். இது குறித்து அவரின் சகா Zhang Bao Guo கூறியதாவது:

"அவருடன் பழகி, 5, 6 ஆண்டுகள் ஆகி விட்டன. சில சமயங்களில் சிலர் அவருடைய வாகனத்தில் ஏறி அமர்ந்ததையும் கவனிக்காமல், பாட நூலைப் படித்துக் கொண்டு இருந்தார். நாள்தோறும் இரவு 10 மணி வரை அவர் வேலை செய்வது வழக்கம். சாலை விளக்கின் கீழ் வாகனத்தை நிறுத்தி, தொடர்ந்து படிக்கின்றார்" என்றார் அவர்.

Chen Pingவின் மதிப்பீட்டின் படி, கடந்த 6 ஆண்டுகளில், 30 ஆயிரம் பேருக்கு அவர் சேவை புரிந்துள்ளார். சுமார் 40 ஆயிரம் யுவான் சம்பாதித்துள்ளார். குடும்பத்தில் 3 பேருக்கு உணவளிக்கின்றார். அவரும் அவரின் குடும்பத்தினரும், பல முறை தோல்வியினால் ஏற்படும் துன்பத்தை சகித்து கொண்டுள்ளனர். அவரின் மனைவி Liu Jing கூறியதாவது:

"நான் இதை தாங்க முடியாது. நீங்கள் ஏன் இந்த பாதையை தெரிவு செய்கின்றீர்கள் என நான் சொன்னேன்" என்றார் மனைவி.

மனைவியின் சந்தேகத்துக்கு Chen Ping பதிலளித்தார்.

"தோல்வியடைந்த போது, பாடல்களைப் பாடுவதன் மூலம் எனக்கு ஊக்கம் அளிக்கின்றேன். மற்றதைப் பற்றி நினைக்க எனக்கு நேரம் இல்லை. தொடர்ந்து பாடுபடுகின்றேன்." என்றார் அவர்.

இது பற்றி, மக்கள் வேறுபட்ட கருத்து கொண்டுள்ளனர். சுமார் 20 ஆண்டுகள் காலம், ஒருவருக்கு மிகவும் அரியது. இதை மேலும் செவ்வனே பயன்படுத்தலாம் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், அவரின் செயல்பாட்டை சிலர் புரிந்து கொள்கின்றனர். யுன்னான் மாநிலத்தின் Kun Ming நகரின் நகரவாசி Wei Qun கூறியதாவது:

"சில சமயங்களில் மக்கள் வாழ்வது, பணத்தைச் சம்பாதிப்பதற்காக இல்லை. அறை கூவல் மக்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தக்கூடும்" என்றார் அவர்.

மற்றவர்களின் வேறுபட்ட கருத்துகளைப் பொருட்படுத்தாமல், Chen Ping யுன்னான் மாநிலத்துக்கு செல்ல ஆயத்தம் செய்கின்றார். அவர் செய்தியாளரிடம் பேசுகையில், முதுகலைக் கல்வி, எதிர்காலத்தில் தனது வாழ்க்கையை மாற்றும் என தாம் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார். நல்ல பணியை தம்மால் பெற முடியாது என்றால், ஊர் திரும்பி, மூன்று சக்கரவாகன ஓட்டுநராக தொடர்ந்து வேலை செய்யலாம் என்றும் அவர் கூறினார்.


1  2  3