• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-17 08:49:56    
மியோ இன ஆசிரியை சு யுன் இ

cri

தென் மேற்கு சீனாவின் Chong Qing நகரமும் Hu Nan மாநிலமும் ஒன்றிணையும் எல்லைப்புறத்தில், இவ்விரண்டு இடங்களைப் பிரிக்கும் Si Chuan ஆறு ஓடுகின்றது. ஆற்றங்கரையில் Long Jia கிராமம் அமைந்துள்ளது. கிராமத்திலுள்ள குழந்தைகள், இவ்வாற்றைக் கடந்து தான், மறு கரையிலுள்ள துவக்கப் பள்ளிக்குப் போக முடியும். முன்பு ஆற்றின் குறுக்காகப் பாலம் இல்லை. கிராமத்திலுள்ள ஒரு மியோ இன ஆசிரியை, கடந்த 20 ஆண்டுகளாக தம் முதுகில் குழந்தைகளைச் சுமந்து ஆற்றைக்கடந்து பள்ளிக்கு கொண்டு செல்கிறார்.

Long Jia கிராமம், Chong Qing நகரத்தை ஒட்டியுள்ளது. Hu Nan மாநிலத்தின் Ba Mu கிராமத்துக்கு நேர் எதிராக உள்ளது. இங்கு வாழும் 50க்கும் மேலான குடும்பங்களைச் சேர்ந்த 300க்கு மேலான மக்கள் மியோ இனத்தவர்கள் அல்லது து இனத்தவர்களாவர். வசந்த காலத்தின் போதெல்லாம், கண்கொள்ளாத காட்சியாக எண்ணெய் வித்து செடி மலர்கள் இந்த அமைதியான கிராமத்தைச் சுற்றி வளர்கின்றது.

கிராமத்தில் இருந்த துவக்கப் பள்ளியில் முதலாவது இரண்டாவது வகுப்பு மாணவர்கள் மட்டும் சேர்க்கப்பட்டனர். இரண்டாவது வகுப்பு தேறிய பின், குழந்தைகள் வேறு பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஆனால், அவை இங்கிருந்து வெகு தூரத்தில் உள்ளன. மலைப்பாதையைக் கடந்து செல்ல வேண்டும். நடப்பது, கஷிடம். அவ்வப்போது நச்சு பாம்பும் எதிர்ப்படும். முன்பு, பல குழந்தைகள், இரண்டாவது வகுப்பு படிப்பை முடித்த பிறகு மேற்கொண்டு படிப்பதில்லை. Long Jia கிராமம் சேரும் Bao An வட்டத்தின் மைய துவக்கப்பள்ளியின் வேந்தர் Zhou Jian Yun கூறியதாவது:

"இக்கிராமத்துக்கும், Bao An வட்டத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள அனைத்து பள்ளிகளுக்குமிடையில் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு மலைப்பாதை உண்டு. இப்பாதையில் நடப்பது மிகவும் கடினம்" என்றார்.

1  2  3