
"கடைசியான குழந்தையை முதுகில் சுமந்து நடக்கும் போது திடீரென, வெள்ளம் வந்து விட்டது. பார்ப்பதற்கு என் இடத்துக்கு சுமார் 10 மீட்டர் தொலைவு. அப்போது என் மனதில் நெருக்குதல் ஏற்பட்டது. இத்தருணத்தில் நானே வெள்ளத்தை சமாளிப்பேனா அல்லது வெள்ளப் பெருக்கு என்னை அடித்துச் செல்லுமா என்று நினைத்தேன்" என்றார், அவர்.
அதிர்ஷ்டவசமாக Shi Yuan Ying உரிய நேரத்தில் பொங்கிப்பாயும் வெள்ளத்தைக் கடந்து சென்று, கரையேறிய வேளையில் வெள்ளம் அவரது உடலை தொட்டுச் சென்றது. அந்தக் காட்சியை இன்று நினைக்கும் போதும் அவருக்கு பயம் ஏற்பட்டது.
இவ்வாறு, Si Chuan ஆற்றில் அவர் 18 ஆண்டுகளாக தம் முதுகில் மாணவர்களை வைத்து கடந்து சென்றுள்ளார். அந்த மாணவர்கள் இப்போது வளர்ந்து விட்டனர். அவர்களின் குழந்தைகளும் Shi Yuan Ying ஆசிரியையின் முதுகு மூலம் படிப்பைத் துவக்கியிருக்கின்றனர். Si Chuan ஆற்றின் நீர் ஓயாமல் ஓடுகின்றது. ஆசிரியை Shi Yuan Ying, தோள்களால் உருவான பாலம் மூலம் கூட்டம் கூட்டமான குழந்தைகள் அனுப்பப்பட்டு விட்டனர்.

இன்று Shi Yuan Yingக்கு 50 வயதாகின்றது. ஒவ்வொரு நாளும் காலையிலும் இரவிலும் அவர் சாப்பிடுகின்றார். மத்தியாணம் பொதுவாக அவர் குழந்தைகளின் வீட்டு வேலையைப் பார்க்கின்றார். அல்லது மாணவர்களுக்கு உதவி செய்கின்றார். இத்தகைய நிலைமையிலும், நாள்தோறும் பாடம் முடிந்து மாணவர்கள் வீடு திரும்பும் போதும், அவர் இன்னமும் அவர்களை முதுகின் மேல் சுமந்து ஆற்றை கடக்கிறார்.
பள்ளியில் இருக்கும் போது, நேரம் இருந்தால், அவர் அடிக்கடி குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுகின்றார். ஒரு புறம், குழந்தைகளுடன் நெருங்கி பழகுகின்றார். மறுபுறம், இத்தகைய வடிவத்தின் மூலம் அவர் உடலில் பட்ட காயத்தையும் நோயையும் குணப்படுத்த வேண்டியுள்ளது.
படுக்கையில் இருந்த போது, தமது மாணவர்களை பற்றி அவர் நினைத்தார். அவர்களின் பாடங்கள் சொல்லிக்கொடுப்பவர் இல்லை என்றும் சொந்த பணி பிறரால் செய்யப்படவில்லை. தாம் படுக்கையில் இருப்பதால், குழந்தைகளுக்கு பாலம் கிடையாது எனவும் அவர் கவலைப்பட்டார். இத்தகைய நிலைமையில், Si Chuan ஆற்றில் நீர் பெருகும் போது, மாணவர்கள் ஆற்றைக் கடந்து செல்ல முடியாத போதும், தமது படுக்கைக்கு முன் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்துள்ளார்.
2005ம் ஆண்டு Si Chuan ஆற்றில் மேல் பாலம் ஒன்று கட்டப்பட்டது. Long Jia கிராமத்தின் குழந்தைகள் ஆற்று நீரில் நடந்து, ஆற்றைக்கடக்க தேவையில்லை. கவலைப்படுவதும் அவசியமில்லை. 1 2 3
|