
Si Chuan ஆற்றின் எதிர்கரையில் Ba Mu என்னும் துவக்க நிலைப்பள்ளி உண்டு. போவதற்கு பத்து நிமிடம் மட்டுமே. 1987ம் ஆண்டு, இப்பள்ளிக்கூடம் நாற்பதுக்கும் அதிகமான குழந்தைகளை சேர்த்துள்ளது.
Long Jia கிராமத்தைச் சேர்ந்த மியோ இன ஆசிரியை Shi Yuan Ying இப்பள்ளியில் பணியாற்ற அனுப்பப்பட்டார். அப்போது ஆற்றின் மேல் பாலம் இல்லை. நாள்தோறும் இம்மாணவர்களை ஆற்றைக்கடந்து பள்ளிக்கு அழைத்துச்செல்வது, அவரது பணியில் ஒரு முக்கிய அம்சமாகி விட்டது.
எனவே, காற்று வீசிய நிலையிலும், மழை பெய்த நிலையிலும், Shi Yuan Yingஇன் முதுகு, இக்குழந்தைகளுக்கு பாலமாக மாறியது. குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. ஒரு நாள் ஆசிரியை தம்மை முதுகில் கட்டி ஏற்றிச்சென்ற போது, ஆற்றின் நடுப்பகுதி வந்ததும், காலை எடுத்து வைத்து மிதிக்க வேண்டிய கல்லைக் காணவில்லை என்று மாணவி Wang Man Fei தெரிவித்தார்.
"அப்போது நீர் வேகமாக பாய்ந்து ஓடுகின்றது. கற்கள் வழுக்கி விட்டன. நடக்கும் போது கவனக்குறைவால் ஆசிரியை தரையில் வீழ்ந்தார். அவரது காலணியும் காணாமல் போயிற்று" என்றார்.
ஆண்டுதோறும், மாணவர்களை ஆற்றைக் கடந்து கொண்டு செல்லும் போது, Shi Yuan Ying எவ்வளவு தடவை தரையில் வீழ்ந்திருப்பது என அவரால் தெரியவில்லை. தொகுதி தொகுதியாக குழந்தைகள், இவ்வாற்றை கடந்துள்ளனர். ஆனால், அவரிடம் காணப்படுவது, காலில் நிரந்தரமாக உள்ள காயமே.
1989ம் ஆண்டில், ஆசிரியை, ஒரு குழந்தையைத் தம் முதுகில் வைத்து ஆற்றங்கரையிலிருந்து சில மீட்டர் தொலைவு கடந்த நிலையில், வெள்ளம் வந்து விட்டது.
1 2 3
|