
குர்க்ஜி இனம், சீனாவின் 55 சிறுபான்மை தேசிய இனங்களில் குறைவான மக்கள் தொகையுடைய இனங்களில் ஒன்றாகும். வட மேற்கு சீனாவின் சிங்கியாங் உய்குர் தன்னாட்சிப் பிரதேசத்தின் கிஜிலேசு குர்க்ஜி தன்னாட்சி சோவில் அவர்கள் முக்கியமாக பரவி வாழ்கின்றனர். நவ சீனா நிறுவப்படுவதற்கு முன், அவர்கள் நாடோடி வாழ்க்கை முறையில் வாழ்ந்தனர். இதனால், இவ்வின மக்களில் 80 முதல் 90 விழுக்காட்டினர்கள் எழுத படிக்கத் தெரியதவர்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலான வளர்ச்சி மூலம், இப்போது, குர்க்ஜி இனம், நவீன தேசிய இனங்களின் வரிசையில் நின்றுள்ளது. கல்வி, இதில் இன்றியமையாத பங்காற்றியுள்ளது.
இதோ, எமது செய்தியாளர் சிங்கியாங்கின் குஜிலேசு குர்க்ஜி தன்னாட்சி சோவின் அடுஷ் நகரில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தினரை பேட்டி கண்டுள்ளார். இதன் மூலம், குர்க்ஜி இனத்தவர்கள் கல்வியில் எவ்வளவு கவனம் செலுத்துகின்றனர் என்பதை செய்தியாளர் உணர்ந்து கொண்டுள்ளார்.
இக்குடும்பத்தின் தலைவர் அப்டு. கார்டிர் தம்பதிகளுக்கு 4 பிள்ளைகள் இருக்கின்றனர். மூத்த மகள் அரிமா அண்மையில், சிங்கியாங் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழித்துறையின் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்துள்ளார். இரண்டாவது மகள் சாவியா, வூ ஹங் வாங் சுங் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் 4வது ஆண்டு மாணவர். பட்டதாரியாக இருக்கின்றார். மூன்றாவது மகள் குரிமிர் சிங்கியாங் பல்கலைக்கழகத்தின் தகவல் பொறியியல் துறையில் பயில்கின்றார். இளம் மகன் றேஸ்பெக் சிங்கியாங் ஷஹங்ஜி பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரியின் முதல் ஆண்டு மாணவராகவிருக்கின்றார். ஒரு சாதாரண குர்க்ஜி குடும்பத்தில் 4 பல்கலைக்கழக மாணவர்கள் இருக்கின்றனர் என்பதற்குக் காரணம் என்ன? குடும்பத் தலைவர் அப்டு. கார்டிர் செய்தியாளரிடம் தம் கருத்தினைத் தெரிவிக்கின்றார்.
1 2 3
|