
தாயாரும், இது பற்றி கூறியதாவது:
"4 குழந்தைகளும் பள்ளியில் இருக்கும் போது, மிக இன்னலான நேரத்தில் வங்கியிலிருந்து கடன் வாங்கினோம். இருப்பினும், எப்படியாயினும் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று மன உறுதிபூண்டுள்ளோம். குர்க்ஜி இனத்தின் பெண் குழந்தைகள் விட்டு வேலை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக சித்திரத் தையல் முதலியவை. ஆனால் எமது மகள்களை இவற்றை செய்ய விடவில்லை. அவர்கள் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பின், உணர்வுப்பூர்வமாக படிப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்" என்றார், அவர்.
குடும்ப பாரம்பரியம், பிள்ளைகளின் நடையில் வெளிக்கொணரப்பட்டது. மூத்த மகள் அரிமா திருமணம் செய்த பின் தம் குழந்தைக்கு கல்வி வங்கி சேமிப்பு செய்துள்ளார். திங்கள்தோறும் 30 யுவான் சேமிப்புத்தொகை.

இந்த 4 குழந்கைகளும் கற்றுக்கொள்ளும் சிறப்புப் பாடங்கள், சமூகத்துக்கு மிகவும் தேவையானவை. அப்டு செய்தியாளரிடம் பேசுகையில், குர்க்ஜி இனமும் முழு சீனாவும் வளர்ச்சியடைவதற்கு தேவையான சிறப்புப்பாடங்களை அவர்கள் தெரிவு செய்துள்ளனர். இதுவும் குழந்தைகள் மீதான தாய்தந்தையின் பாசம் ஆகும் என்றார்.
அப்டு, பிள்ளைகளுக்கு மேலும் உயர்ந்த கோரிக்கையை முன்வைத்தார். அவர் கூறியதாவது:
"இப்போது மூத்த மகள் ஆராய்ச்சி மாணவர். இதர பிள்ளைகளும் ஆராய்ச்சி மாணவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் பட்டதாரியாகிய பின், குர்க்ஜி சோவுக்குத் திரும்ப வேண்டும். எங்கள் குர்க்ஜி சோவில் 5 லட்சத்து 80 ஆயிரம் மக்களில், ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர், குர்க்ஜி இனத்தவர்களாவர். குர்க்ஜி இனக் கல்வியைப் பொறுத்த மட்டில், ஒவ்வொரு திறமைசாலியும் புது நம்பிக்கையை தருவார். எனது குடும்பத்தில் 4 திறமைசாலிகள் உள்ளனர். எங்கள் குர்க்ஜி இனம் மற்றும் குர்க்ஜி சோவின் வளர்ச்சிக்கும், குர்க்ஜி சோவின் பல்வேறு தேசிய இனத்தின் வளர்ச்சிக்கும் அவர் பங்காற்றுவார்கள்" என்றார், அவர்.
கல்வியில் கவனம் செலுத்தி வளர்ப்பதன் காரணமாக குர்க்ஜி இனம், நவீனமயமாக்க வளர்ச்சி பாதையில் நடைபொட்டுள்ளது. குர்க்ஜி சோவின் தலைவர் அக்பர் எமது செய்தியாளரிடம் கூறியதாவது:
"குறுகிய 50 ஆண்டுகளில் தேசிய இனத்தின் தலைவிதி மாறியுள்ளது. குர்க்ஜி இனம், எழுத படிக்கத் தெரியாத இனம் என்ற நிலையிலிருந்து விடுபட்டு, நவீனமயமாக்க தேசிய இனமாக மாறியுள்ளது. கல்வியில் கவனம் செலுத்தியதன் விளைவு, இது. கல்வி, எங்கள் மனதிலுள்ள ஆதாரம்" என்றார். 1 2 3
|