• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-24 18:39:25    
கல்வியில் கவனம் செலுத்தும் குர்க்ஜி இனக்குடும்பம்

cri

"குர்க்ஜி இனம், நாடோடி வாழ்க்கை நடத்தும் தேசிய இனம். முன்பு, இயற்கை நிலைமை மோசமாயிருப்பதாலும், வருமானம் குறைவாயிருப்பதாலும், பள்ளிக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தவர் மிகக் குறைவு. எனது பாட்டனார் படிக்கவில்லை. ஆனால், அவர் பலவித இன்னல்களைச் சமாளித்து, எனது தந்தையை பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அப்போதைய குர்க்ஜி சோவில் நெடுஞ்சாலை இல்லை. இடைநிலைப்பள்ளிக்குப் போக, எனது தந்தை, 88 முதல் 90 கிலோமீட்டர் தூரத்தை நடந்து கடக்க வேண்டும். எனவே, பள்ளியில் படிப்பது, எங்களைப் பொறுத்த வரை மிகவும் முக்கியமானது என்பதை சிறு வயதிலிருந்தே உணர்ந்து கொண்டுள்ளேன்" என்றார்.

எனவே, அப்டுவின் தந்தையும் கனத்த இன்னல்களைச் சமாளித்து அப்டு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து முடிப்பதற்கு ஆதரவளித்தார்.

ஒரு தேசிய இனத்தை அல்லது ஒரு நாட்டைப் பொறுத்த வரை, கல்வித்துறை மிகவும் முக்கியமானது. கல்வித்துறை வளராமல், வறுமையிலிருந்து மக்கள் விடுபட முடியாது என்று அப்டு. கார்டிர் கருதுகின்றார். இப்போது குர்க்ஜி இனத்தவர்கள் நாளுக்கு நாள் சீரான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். எனவே, தமது குழந்தைகள் உயரிய கல்வியைக் கற்று, குர்க்ஜி இனத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு சேவை புரிய செய்திட வேண்டும் என்று அப்டு. கார்டிர் உறுதிபூண்டுள்ளார்.

ஒரு குடும்பத்தில் 4 பல்கலைக்கழக மாணவர்கள் இருப்பது, மகிழ்ச்சி தரும் விஷயம். ஆனால், குழந்தைகளுக்குத் தேவையான கல்வி கட்டணம் என்பது வருமானம் அதிகம் பெறாத அப்டு தம்பதிகளுக்கு ஒரு கனத்த சுமையாகும். குடும்பக் கல்வி நிதியத்தை நிறுவுவது, அவர்களின் ஒரு புத்தாக்கம் என்று கூறலாம். அவர் கூறியதாவது:

"1982ம் ஆண்டில், எனது மூத்த மகள் பிறந்தார். அப்போது எனது சம்பளம் 58 யுவான் மட்டுமே. திங்கள்தோறும் 30 யுவானை வங்கியில் சேமித்தோம். வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் இந்த சேமிப்பை மட்டும் உறுதி செய்தோம். இப்போது என்னுடைய திங்கள் வருமானம், 2400 யுவான். எனவே, 150 யுவான் வங்கியில் சேமிக்கின்றோம்" என்றார்.

1  2  3