
காடுகளில் வாழ்ந்திருந்த எலென்சுவன் இனத்தவர்கள் மலைகளை விட்டு வெளியேறி, துப்பாக்கிகளைக் கைவிட்டு, வேட்டையாடும் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அவர்களின் கடந்த காலம், தற்காலம், மற்றும் எதிர்காலத்தை அறிந்து கொள்ளும் முயற்சியுடன் எமது செய்தியாளர்கள் எலென்சுவன் இனத்தவர்கள் ஒன்றுகூடும் இடத்தை சென்றடைந்தார்கள்.
சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் வட கிழக்கு பகுதியில் மூன்று ஆறுகள் சங்கமித்து, நான்கு பக்கங்களிலும் மலைகள் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில் அவர்கள் வசிக்கின்றனர். ஹெ செங் லு என்பவரின் குடும்பம் இங்கு வாழ்கின்றது.
இவ்வாண்டு 50 வயதான ஹெ செங் லு, இக்கிராமத்தில் தலைசிறந்த வேட்டையாளராக இருந்தவர். இருப்பினும் 1996ம் ஆண்டு உள்ளூர் அரசு, வேட்டையாடுதல் மீது தடை விதிக்கும் கொள்கையைச் செயல்படுத்தத் துவங்கிய பின், அவர், கடந்த பத்து ஆண்டுகளில் வேட்டையாடுவதற்கென துப்பாக்கியைத் தொடவே இல்லை. கடந்த கால வேட்டையாடும் வாழ்க்கை பற்றி அவர் கூறியதாவது:
"முன்பு, வேட்டையாடிய போது, பழங்குடி இன மக்கள் வசிக்கும் இடங்களில் மாறிமாறி குடியேறினோம். வசிப்பிடங்களுக்குச் சுற்றுப்புறங்களில் விலங்குகள் அதிகம், இவ்விடங்கள் மலைச்சரிவிலிருந்து அதிக தொலைவில் இருக்கவில்லை" என்றார்.
1 2 3
|