
50 ஆண்டுகளுக்கு முன், எலென்சுவன் இனத்தவர்கள், பூர்வகுடி சமுதாயத்தில் இருந்த படியால், அவர்கள் வெளியுலகத்துடன் அதிக தொடர்பு கொள்ளவில்லை. வழக்கமாக அவர்கள் கூடாரம் போன்ற வீடுகளில் வசித்திருந்தனர். அன்றி, அடிக்கடி வேறு இடங்களுக்கு குடியேறுவதும் உண்டு. விலங்குகள் இருக்கும் இடமெங்கும் அவர்கள் குடியேறினர். கரடி, காட்டு பன்றி, காட்டு முயல் உள்ளிட்ட விலங்குகள் எலென்சுவன் இனத்தவர்களின் துப்பாக்கிகளுக்கு இலக்காகி பலியாகின. மலை என்பது, அவர்களின் ஆடை உணவுகளின் ஊற்றுமூலமாக இருந்தது. மலைகளைக் கடவுளாகக் கருதும் எலென்சுவன் இன மக்கள், வேட்டையாடுவதற்கு முன் கடவுளுக்கு வழிபாடு செய்வர்.
"நான் அதிகமான விலங்குகளை பெற செய்திடுங்கள், பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளியுங்கள்" என்றார்கள்.
அநேகமாக, கடவுளின் பாதுகாப்பினால், நலேன்சிங் இனத்தவர்கள் அனைவருமே, தலைசிறந்த வேட்டைகாரர்களாவர். ஹெ செங் லு அவரது 16 வயதிலே முதன்முறை வேட்டையாடிய போது, ஒரு கறுப்புக் கரடியை சுட்டுக்கொன்றார். இவ்வளவு கொடிய விலங்கைக் குறிதவறாமல் சுட்டுக் கொன்றமை, அவரை மட்டுமல்ல, முழு கிராமவாசிகளையும் பொறுத்த வரை கொண்டாடத்தக்க ஒரு விஷயமாகும். அன்றிரவு அனைவரும் ஒன்றுகூடி, கொண்டாட்டம் நடத்தினர்.
அப்போதைய வேட்டையாடுதல் வாழ்க்கை, இன்று எலென்சுவன் இனத்தவர்களிடமிருந்து மென்மேலும் விலகி நிற்கிறது. நவ சீனா நிறுவப்பட்டது முதல், எலென்சுவன் இனத்தவர்கள் படிப்படியாக நவீன சமுதாயத்தை நோக்கி முன்னேறிச் சென்றுள்ளனர், முன் கண்டிராத மருத்துவ சிகிச்சை, கல்வி, உறைவிடம், போக்குவரத்து வசதிகளை அனுபவிக்கத் துவங்கியுள்ளனர். அரசின் உதவியுடன், அவர்கள் இறுதியாக பெரிய மலைகளிலிருந்து வெளியேறி, வேட்டையாடுதல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
அரசின் இலவச உதவியுடன் கட்டப்பட்ட அகலமான, ஒளிமயமான பெரியதார் செங்கல் வீட்டில் அவர்கள் குடியேறியுள்ளனர். காய்கறி வளர்ப்புத் தோட்டமும், பத்துக்கும் அதிகமான கோழிகளும் அவர்களின் சொத்தாகும். தவிரவும், இதர எலென்சுவன் இனத்தவர்கள் போலவே, திங்கள்தோறும் அரசிலிருந்து வாழ்க்கை செலவினந்துக்கான உதவித்தொகையைப் பெறுகின்றனர்.
1 2 3
|