• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-01 13:25:08    
மலையில் வாழும் எலென்சுவன் இன மக்கள்

cri

ஹெ செங் லு தம்பதி, எதிர்காலத்தின் மீது நிறைய நம்பிக்கை கொண்டுள்ளனர். மூத்த மகள், திருமணம் செய்துள்ளார். சில வேளையில் அவர்களைக் கவனிக்க வருகின்றார். இரண்டாவது மகள் ஹெ சியுவும் இளம் மகன் ஹெ மேங்கும் எலென்சுவன் தேசிய இன இடைநிலைப்பள்ளியில் பயில்கின்றனர். அனைத்து கல்வி கட்டணங்களும் இலவசமானவை. நல்ல மதிப்பெண் பெற்றுள்ள இரண்டாவது மகள் மீது தாய், பெரும் எதிர்பார்ப்பு கொண்டுள்ளார். அவர் கூறியதாவது:

"அவள் சிறந்த முறையில் படிக்கின்றாள். அடுத்த ஆண்டு மூன்றாம் வகுப்பு படிப்பு முடிந்த பின் பெய்சிங் போய் சிரேஷ்ட இடைநிலைப் பள்ளியில் படிக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன்" என்றார்.

இவ்வாண்டு மூன்றாம் வகுப்பில் நுழைந்த ஹெ சியு, வயது அதிகமில்லை என்ற போதிலும், அவளுக்குச் சொந்த கருத்து உண்டு. அவர் கூறியதாவது:

"எலென்சுவன் இனம் பற்றிய அறிவைக் கற்றுக்கொள்ளும் வகையில், நான் பெய்சிங் சிறுபான்மை தேசிய இன பல்கலைக்கழகத்தில் சேர விரும்புகின்றேன். பின்னர், எலென்சுவன் தன்னாட்சி சோவை, மாநகரத்தை போல் வளமாகவும் எழிலாகவும் நிர்மாணிப்பதில் கலந்து கொள்வேன்" என்றார்.

அவள், சரளமாக ஹான் இன மொழியைப் பேசுகின்றார். ஓய்வு நேரத்தில் பல்வகையான பாப் இசையைக் கேட்க விரும்புகின்றார். மலைப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்துள்ள புதிய தலைமுறை எலென்சுவன் இனத்தவர், மலைப்பிரதேசத்தை வெகு காலத்துக்கு முன்பே விட்டு கன்றுள்ளனர். இருப்பினும், மலைப் பிரதேசமும் அங்குள்ள வாழ்க்கையும் என்றுமே அவளது மனதில் ஆழப்பதிந்துள்ளன. என்றுமே மறந்து விடுவதில்லை. மகிழ்வற்ற நேரமெல்லாம், தனியாக மலைப் பகுதியில் நடக்க விரும்புகின்றார் என்று அவர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

"மலைப்பகுதியில் தங்கும் போது, அங்குள்ள காற்று வெளிப்புறத்தில் உள்ள காற்றை விட புதியது. மலை மீது நான் சொல்ல முடியாத அன்பு கொண்டுள்ளேன். தான் மலைப்பகுதியிலேயே பிறந்ததாக எனது அப்பா கூறியுள்ளார். எனவே, மலையில் இருக்கும் போது, எனது அப்பாவின் முன்னாள் தோற்றத்தைக் காண முடியும்" என்று ஹெ சியு கூறினார்.


1  2  3