
உய்குர் இன மங்கைகள்
உய்குர் இனம், வட மேற்கு சீனாவின் சின்சியாங் உய்குர் இன தன்னாட்சிப் பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய மத நம்பிக்கை கொண்ட தேசிய இனங்களில் ஒன்றாகும். அதன் மக்கள் தொகை, சின்சியாங்கின் மொத்த மக்கள் தொகையில் 45.73 விழுக்காடு வகிக்கின்றது. அவர்கள் பெரும்பாலும் தியன் சன் மலைக்கு தெற்கிலுள்ள பல்வேறு பசுமை மண்டலங்களில் வாழ்கின்றனர். எமது செய்தியாளர், சின்சியாங்கின் காஷ் நகரத்திலுள்ள உய்குர் இனக் குடும்பத்தில் இருந்து, உய்குர் இனத்தின் நட்பார்ந்த பாரம்பரிய குடும்ப வாழ்க்கையை நேரில் உணர்ந்து கொண்டார்.
இக்குடும்பத்தின் தலைவர், அப்துல்ஜபார் என்பவராவார். எமது செய்தியாளர் அவரது வீட்டு முற்றத்தில் நுழைந்ததும், உய்குர் இன பாணியிலான கட்டிடம் தென்படுகின்றது. இந்த இரண்டு மாடிக் கட்டிடத்தில் வரவேற்பு அறையின் அலங்காரம் உய்குர் இனப் பாணியுடையது. தரைக் கம்பளம், சுவர் கம்பளம் முதலியவை, உய்குர் இன பாணியில் காணப்படுகின்றன. இருப்பினும், அவற்றுக்கிடையில் உள்ள தொலைக்காட்சி பெட்டி போன்ற வீட்டுச் சாமான்கள், நவீன நடையைக் காண்பிக்கின்றன.
எமது செய்தியாளர் அமர்ந்த பின், விருந்தோம்பல்மிக்க குடும்பத்தலைவர் உய்குர் இனத்தின் பழக்க வழக்கங்களின் படி திராட்சை முதலிய பழங்களை வைத்தனர். துவக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணி புரியும் மூத்த மகள் பாங்லீடன் அப்துகதேர் முதன்முதலில் தம் குடும்பம் பற்றி அறிமுகப்படுத்தினார்.
"எனது குடும்பத்தில் 9 சகோதரர்களும் சகோதரிகளும் உள்ளனர். 6 பேர் இங்கு வசிக்கின்றனர். இது, எங்கள் உய்குர் இனத்தின் பாரம்பரியம், பிரிந்து வாழ எவரும் விரும்பவில்லை. சிறப்புக் காரணம் இல்லாமல், ஒன்றுபட்டு வசிக்கவே விரும்புகின்றோம்" என்று அவர் கூறினார்.
1 2 3
|