
உய்குர் இன மங்கை
சகோதரர்-சகோதரிகளிடை அன்பும் பரஸ்பர உதவியும் காரணமாக, குடும்பப் பொறுப்பைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என மினாவார் கருத்தில் கொண்டு, வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு கிடைத்த வருமானத்தை குடும்பப் பயன்பாட்டுக்காக ஒப்படைத்துள்ளார்.
அப்துல்ஜபாரின் நிர்வாகத்தில், அனைவரும் அன்புடன் நெருங்கி பழகி பல்வேறு துறைகளில் பணி புரிகின்றனர். குடும்பம் சுமூகமாக இருந்தால், சமூகத்துக்கும் நாட்டிற்கும் நன்மை தரும் என அவர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். ஏனெனில், குடும்பம், சமூகத்தின் ஒரு பகுதி. குடும்பத்தில் சுமுகம் இல்லாமல், சமூகத்தில் இணக்கம் இருக்காது. இந்த நல்லிணக்கமான குடும்பத்தில், அனைவரும், தத்தமது பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவதில் பெரும் கவனம் செலுத்துகின்றனர். அவர்கள் பரஸ்பரம் அனுபவங்களைப் பரிமாறி, உதவுகின்றனர். எடுத்துக்காட்டாக, 5வது தமக்கையின் மூத்த மகள், அனைவரின் கவனத்தில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
மூத்த மகள், பாங்லீடன் அப்துகதேர் பேசுகையில், குடும்பம் சீரான வாழ்க்கை நடத்தியுள்ளது. குடும்பத்துக்கு அரசு உதவி அளித்துள்ளதை என்றுமே மறந்து விடவில்லை. முன்னர், அனைவரும் சுமார் 100 சதுர மீட்டர் பரப்புடைய வீட்டில் வசித்திருந்தனர். அப்துல்ஜபார் குடும்பம் போன்ற, உறைவிட இன்னல் பட்ட குடும்பத்தின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, காஷ் நகராட்சி அரசின் ஒருமித்த திட்டத்துக்கிணங்க, புதிய குடியிருப்பிடம் கட்டியமைக்கப்பட்டது. இங்கு வசிக்க விரும்பிய உய்குர் இன உடன்பிறப்புகளுக்கு பல்வேறு துறைகளில் உதவி வழங்கப்பட்டது. இப்போது, அப்துல்ஜபார் குடும்பம், 450 சதுரமீட்டர் பரப்புடைய இரண்டு மாடிக் கட்டிடத்தில் வாழ்கின்றது. பத்தாண்டுகளுக்கு முன், நிலத்தை வாங்கி கட்டிடம் நிர்மாணிப்பதற்காக, அவர்கள் ஒரு லட்சம் யுவானை மட்டும் செலவழித்தனர்.

உய்குர் இன ஆடல்
எமது செய்தியாளருக்குத் துணையாகச் சென்ற காஷ் நகரத்தின் தார்புகுஜி குடியிருப்புப் பிரதேசத்தின் கட்சிக்கிளை செயலாளரும் உய்குர் இன ஊழியருமான சிமேகுல். டுராக் அம்மையார் பேசுகையில், இந்த இணக்கமான உய்குர் இனப் பெரும் குடும்பங்கள் மேலும் அருமையாக வாழ்வதற்காக, குடியிருப்புப் பிரதேசத்தின் பணியாளர்கள், தம்மால் இயன்ற மட்டும் சேவை புரிகின்றனர். குறிப்பாக, சுற்றுச்சூழல் மேம்படுத்தப் பாடுபடுகின்றனர். இவ்வாறு அனைவரும், சொகுசான எழிலான குடியிருப்புப் பிரதேசத்தில் வாழ்கின்றனர். அவர் கூறியதாவது:
"முன்னர், இங்கு சுற்றுச்சூழல் கொஞ்சம் மோசமாக இருந்தது. 2002ம் ஆண்டில் குடியிருப்புப் பிரதேசக் கமிட்டி நிறுவப்பட்ட பின், முதன்முதலில், குடியிருப்புப் பிரதேச சுற்றுச்சூழலை மேம்படுத்த வேண்டும் என்று தலைமைப்பீடம் முடிவு செய்தது. முதலில், குடிநீர் வசதி செய்து தரப்பட்டது. பின்னர், மாசு வெளியேற்ற திட்டப்பணி நடைமுறைப்படுத்தப்பட்டது. பாதை பராமரிப்பு உள்ளிட்ட இதர பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன" என்றார்.
இவ்வம்மையாரின் வார்த்தைக்கு அப்துல்ஜபார் குடும்பம் ஒப்புதல் கூறியது. மூத்த மகள், பாங்லீடன் அப்துகதேர் கூறுகையில், இது, உண்மையே என்றார். குடியிருப்புப் பிரதேச பணியாளர்கள் அவர்களுக்கு செய்துள்ள அனைத்து பணிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். இங்கு வாழ்ந்து மகிழ்ச்சியடைவதாக அவர்கள் கூறினார்கள் என்றும் அவர் சொன்னார். 1 2 3
|