
உய்குர் இன ஆடல்
உய்குர் இனத்தின் பாரம்பரியத்துக்கிணங்க, தாயும் தந்தையும் மரணமடைந்த பின், மூத்த மகன், அவர்களின் பொறுப்பில் இருக்கின்றார். பாங்லீடன் அப்துகதேர் எங்களிடம் பேசுகையில், தனது தந்தையும் தாயும் மரணமடைந்த பின்னர், மூத்த சகோதரர் அப்துல்ஜபார் தம்பி, இப்பெரும் குடும்பத்தை நிர்வகிக்கும் பெரும் பொறுப்பை ஏற்றுள்ளார். குடும்பத்தின் அனைத்து விவகாரங்களையும் கையாள்கின்றார். மற்றவர் அனைவரும் அவருக்குக் கீழ்பணிய வேண்டும் என்றார்.
உய்குர் இனத்தின் பாரம்பரியத்தின் படி, கூடிவாழ்ந்து வரும் அனைவரும் தத்தமது வருவாயை குடும்பத்தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். குடும்பத்தின் அன்றாட வாழ்க்கைச் செலவு, வீட்டைப் பராமரிக்கும் கட்டணம், பிள்ளைகளின் கல்விக்கட்டணம் முதலியவற்றை அவர் ஏற்பாடு செய்கின்றார். வருமானம் வேறுபட்டதால், குடும்பத்தினர்களிடையே சண்டை ஏற்படுமா என்று செய்தியாளர் கேட்டார். இல்லை என்று அப்துல்ஜபார் பதிலளித்தார்.
40 வயதான ஐந்தாவது தமக்கை மினாவார், உய்குர் இன மகளில் தலைசிறந்தவர். தானே கூட்டு நிறுவனத்தை நடத்துகின்றார். வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு, சின்சியாங்கிற்கும், தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவுக்குமிடையில் பயணம் செய்து வருகிறார். அவரது கணவர் துருக்கியில் வணிகம் செய்கின்றார். இருவரும் வீட்டில் தங்கியிருப்பது மிகக்குறைவு. அவரது இரண்டு மகள்களின் வாழ்க்கை மற்றும் படிப்பு மற்ற சகோதரர்-சதோதரிகளால் கவனிக்கப்படுகின்றன. சுமுகமான நட்பார்ந்த சூழ்நிலையில் இரு மகள்களும் சீராக வளர்ந்துள்ளனர். மூத்த மகள், அண்மையில் சின்சியாங் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.
அனைவரினதும் சுமையைக் குறைக்க, பெரும் குடும்பத்திலிருந்து வெளியேறி குடியேற வேண்டும் என, மினாவார் யோசித்திருந்தார். ஆனால், சகோதரர்களும் சகோதரிகளும் இதற்கு உடன்படவில்லை. மூத்த மகன் அப்துல்ஜபார் இதை உறுதியாக தடுத்தார்.
1 2 3
|