• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-13 09:40:32    
வறட்சியால் பாதிக்கப்பட்ட Si Chuan மாநிலத்தில் மக்களின் முயற்சிகள்

cri

இவ்வாண்டின் கோடைக்காலம் முதல், தென் மேற்கு சீனாவின் Si Chuan மாநிலத்தில், கடும் வறட்சி ஏற்பட்டது. Si Chuan மாநிலம், தானியம் விளையும் முக்கிய மாநிலமாகும். கடந்த 55 ஆண்டுகளில் இந்த வறட்சி மிகவும் கடுமையானது. இம்மாநிலத்தில் பொது மக்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வப் புள்ளி விபரங்களின் படி, மாநிலம் முழுவதிலும் உள்ள 108 மாவட்டங்களில் சுமார் ஒரு கோடி மக்களுக்கும், 58 லட்சம் கால்நடைகளுக்கும் குடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டது. 20 லட்சத்துக்கு அதிகமான ஹெக்டர் நிலப்பரப்பில் பயிர்கள் பாதிக்கப்பட்டன. பருவ மழையின் வரவுக்கு பின், வறட்சி படிப்படியாக நீங்கத் தொடங்கியது. தற்போது, பாதிக்கப்பட்ட பிரதேசத்தில், பொது மக்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலைமை பற்றி பார்ப்போம்.

Si Chuan மாநிலத்தின் Nan Chong நகரில் உள்ள Guan Yin Yan கிராமம், மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றாகும். ஆனால், தற்போது, இலையுதிர்கால தானியம் மற்றும் காய்கறிகளை விவசாயிகள் பயிரிடுவதற்கு மாவட்ட அரசு ஏற்பாடு செய்துள்ளது. வயல்களில், சுறுசுறுப்பாக உழைக்கும் விவசாயிகள் காணப்படுகின்றனர். பிற்கால இலையுதிர்கால அறுவடைக்கு உத்தரவாதம் அளிக்கும் பொருட்டு, நேரத்தோடு மீண்டும் விதை விதைப்பதில் மும்முரமாக ஈடுபட வேண்டும் என விவசாயி Fan Ying Guang செய்தியாளருக்கு கூறினார்.

இவ்வாண்டு Nan Chong நகரில் கடும் வறட்சி ஏற்பட்ட போது, உள்ளூர் பிரதேசத்தின் வேளாண்மை கடுமையாக பாதிக்கப்பட்டது. 50 வயதான விவசாயி Fan Yu Shu, பாதிக்கப்பட்டவரில் ஒருவராவார். அவரும் அவரின் குடும்பத்தினரும் பயிரிடும் தானியம் 80 விழுக்காடு குறைந்தது. உருளைக்கிழங்கு மற்றும் மக்காச்சோளம் அறுவடை கிடைக்கவில்லை. மிக இக்கட்டான நிலையின் போது, விதைகள், உரம் உள்ளிட்ட உற்பத்தி பொருட்களை இலவசமாக அவர்களுக்கு அரசு வழங்கியது. இது பற்றி அவர்கள் மனம் உருகினர்.

"உருளை, முள்ளங்கி உள்ளிட்ட விதைகளை எங்களுக்கு உள்ளூர் அரசு வழங்கியது. அரசு எங்களுக்கு பெரும் ஆதரவு அளித்து, எங்கள் நிலத்தை உழுவதற்கு உதவிடுகின்றது. விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்துகின்றது" என்றார் அவர்.

1  2  3