• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-13 09:40:32    
வறட்சியால் பாதிக்கப்பட்ட Si Chuan மாநிலத்தில் மக்களின் முயற்சிகள்

cri

நெல் வயல் ஒன்றின் பக்கத்தில், ஆண் ஒருவரை செய்தியாளர் கண்டார். அவரின் பெயர் He Kun. அவர், இவ்வட்டத்தின் பொறுப்பாளர் ஆவார். வறட்சி ஏற்பட்ட பின், பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அவர் அடிக்கடி சென்றார்.

மிகப் பல விவசாயக் குடும்பங்கள் உற்பத்தியை மீட்பதற்குத் துணை புரியும் பொருட்டு, மாவட்ட அரசும், வட்ட அரசும் பல வழிமுறைகளை முன்வைத்தன என அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

"நாங்கள் நெல் வயலில் தினை நேரம் பிடித்து அறுவடை செய்கின்றோம். இதற்கிடையில், இலையுதிர்கால தானியம் மற்றும் காய்கறிகளை மீண்டும் விதைக்கிறோம். வறட்சியினால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை நிறைவு செய்கின்றோம். தவிர, இலையுதிர்கால காய்கறிகள் பயிரிடப்பட்ட பின்னர், நீர் வாழ்வன வளர்ப்புத் தொழிலை விவசாயிகள் தொடரலாம். இது மட்டுமல்ல, காய்கறிகளை அவர்கள் சந்தையில் விற்கலாம். விவசாயிகள் பணத்தை சம்பாதிக்கலாம். இது, அவர்களின் இழப்பை குறைக்கலாம்" என்றார் அவர்.

வறட்சி நிலத்தில், விவசாயிகள் சுறுசுறுப்பாக உழைப்பதால், அவர்களுக்கு மிகவும் களைப்பு. மாவட்டக் கட்சிக் கமிட்டியும் அரசும், விவசாயிகளுக்கு விவசாயச் சாதனங்களை வாங்கி, நிலத்தை மீண்டும் உழுது, விவசாயிகளின் உழைப்புச் சுமையை குறைத்துள்ளன என்று He Kun செய்தியாளருக்கு கூறினார். இலையுதிர்கால காய்கறி விதைகளை விவசாயிகளுக்கு மாவட்டம் இலவசமாக அளித்துள்ளது. மாநில அரசு பாதிக்கப்பட்ட விளை நிலங்களில், ஹெக்டருக்கு 750 யுவான் உதவித் தொகை வழங்கியுள்ளது.

இலையுதிர்கால தானியம் மற்றும் காய்கறிகளைத் தீவிரமாக பயிரிடும் அதே வேளையில், நீர் ஊற்று மூலத்தை தோண்டுதல், மக்களுக்கும் கால்நடைக்கும் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையை தீர்த்தல் ஆகிய நடவடிக்கைகள், Si Chuan மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. Nan Chong நகரில், இவ்வாண்டு வறட்சியால் 1140 நதிகளில் நீரோட்டம் துண்டிக்கப்பட்டது. பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கும் கால்நடைகளுக்கும் குடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இப்பிரச்சினையைத் தீர்க்க, பல்வேறு கிராமங்களில் ஆழ் குழாய் கிணறுகளைத் தோண்டுவதற்கு உதவும் பொருட்டு, கிணறுகளை தோண்டும் சிறப்பு அணிகளை நகராட்சி அரசு ஏற்பாடு செய்தது.

1  2  3