
Nan Chong நகரின் Gao Ping பிரதேசத்தை எடுத்துக்காட்டாக கூறலாம். இதில் பல கிராமங்கள் மலை பகுதியில் அமைந்துள்ளன. இங்கு கிணறுகளை தோண்டுதல் கடினம். அண்மையில், இப்பிரதேசத் தலைவர் Huang Xiao Ming கிணறு தோண்டும் அணிக்குத் தலைமை தாங்கி, மலையில் கிணறுகளை தோண்டினார். அவர் செய்தியாளருக்கு கூறியதாவது:
"மக்களுக்கும் கால்நடைகளுக்கும் குடிநீர் பற்றாக்குறை என்ற பிரச்சினை முதலில் தீர்க்கப்படும். 50 கிணறு தோண்டும் சாதனங்களைப் பயன்படுத்தி, 3000 கிணறுகளை தோண்டினோம். கிணறுகளை தோண்டுதல் சிறந்த பயன் பெற்றுள்ளது. ஒவ்வொரு கிணற்றிலிருந்தும் நீர் கிடைக்கிறது" என்றார், அவர்.
எதிர்பாராத கடும் வறட்சியை எதிர்நோக்கி, பல்வேறு நிலை அரசுகளின் பயனுள்ள நடவடிக்கைகளினால், Si Chuan மாநிலத்தில் பெரும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படவில்லை. உற்பத்தி மீட்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள சலுகையுடன் கூடிய கொள்கைகளினால், விவசாயிகள் மன நிம்மதி அடைகின்றனர். வேளாண் வரியை விலக்குவது, தானிய உதவித்தொகை, வேளாண் உற்பத்திச் சாதன உதவித்தொகை, சிறந்த விதை உதவித்தொகை உள்ளிட்ட, பொது மக்களுக்கு நன்மை தரும் பல கொள்கைகள் இவற்றில் அடங்கும்.
வறட்சி ஏற்பட்ட பின், கடந்த 55 ஆண்டுகளில் கண்டிராத மிகப் பெரிய வறட்சியை வெற்றிக் கொள்வது மட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் முழு நம்பிக்கை கொண்டுள்ளனர். Guan Yin Yan கிராமவாசி Fan Yu Shu பேசுகையில், முன்பு இத்தகைய வறட்சி ஏற்பட்ட போது, வேளாண் வரி செலுத்துவதற்காக கவலைப்பட்டதாக கூறினார். ஆனால், தற்போது, இவ்வாறு செய்ய தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
புள்ளி விபரங்களின் படி, Si Chuan மாநிலத்தில் வறட்சி ஏற்பட்ட பின், முழுச் சமூகத்திலும் 30 கோடி யுவான் நிதியும், 8 லட்சம் தொகுதி சாதனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2 கோடியே 60 லட்சம் பேர் வறட்சி ஒழிப்பில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், மிகப் பல அடி மட்ட ஊழியர்கள், பொது மக்களுடன் இணைந்து இந்நடவடிக்கையில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுகின்றனர். கடும் வறட்சி 100 நாட்கள் தொடர்ந்தது. முழு மாநிலத்திலும் ஒருவருக்கும் வறட்சியால் உயிரிழப்பு ஏற்பட்டதில்லை. கடும் இயற்கைச் சீற்றம் ஏற்பட்ட போது அடிக்கடி காணப்படும் பேரச்சமும் இல்லை. 1 2 3
|