• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-15 09:31:18    
திபெத்தில், ஊனமுற்றோர் மற்றும் அனாதைகளின் பள்ளிக்கூடம்

cri

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் லாசாவில் Cai Quan என்னும் நல சிறப்பு பள்ளி வாசலில், மாணவர்கள் கையோடு கைசேர்த்து பள்ளி பாடலைப் பாடிக் கொண்டி, இருக்கின்றனர். குழந்தைகளின் பாட்டொலி, 3700க்கு மேலான சதுர மீட்டர் உடைய திபெத் பாணி வளாகத்தின் மேலே மிதந்து லாசாவின் இலையுதிர்காலத்தில் உயிராற்றலை ஊட்டுகின்றது.

ஊனமுற்றவர்களையும் அனாதைகளையும் சேர்த்துக்கொள்ளும் இப்பள்ளியின் வேந்தர், Champa Tsondre என்பவராவார். அதே வேளையில், லாசா நகரிலுள்ள ஒரு தேசிய இனக் கைவினைத் தயாரிப்பு சாலையின் தலைவரும் ஆவார். அழகும் உயரமான உடலும் படைத்த அவர், எமது செய்தியாளர்களின் கருத்தில் உற்சாகமானவர். பழைய திபெத்தில் வளர்ந்துள்ள வறிய குடும்பங்களின் குழந்தைகளைப் போலவே அவரும், மரபுவழி பள்ளியில் படிக்கவில்லை. சில ஆண்டுகாலம் திருமறை மட்டுமே படித்திருந்தார். வளர்ந்த பின், தச்சராகவும் காலணித் தயாரிப்புத் தொழிலாளராகவும் இருந்தார். நடிகராகவும் விளங்கினார். அவரது வாழ்க்கை அனுபவங்கள் ஏராளமானவை.

கடின வாழ்க்கையில் வளர்ந்த அவர், 1986ம் ஆண்டு, லாசா நகரில் உள்ள ஒரு காலணித் தயாரிப்பு ஆலையின் தலைவரானார், ஆலையின் தலைவராக இருந்த போது, சமுகத்தில், சில அனாதைகள், ஊனமுற்ற குழந்தைகள் பள்ளிக்கு போகும் வாய்ப்பு இல்லை. ஊனப்பட்ட இளைஞர்கள் பலர் பணிபுரிய முடியாமல், சாலைகளில் அலைந்து திரிந்தனர். மீண்டும் மீண்டும் யோசித்த பின்னர், அனாதைகளுக்கும் ஊனமுற்றோர்களுக்கும் படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்க அவர் மன உறுதிபூண்டார்.

1  2  3