
பின்னர், அவர், காலணித் தயாரிப்பு ஆலையை தேசிய இன கைவினைத் தொழிற்துறை பன்நோக்க ஆலையாக மாற்றி, சமூகத்திலிருந்து 20க்கும் அதிகமான ஊனப்பட்ட இளைஞர்களையும், அனாதைகளையும் சேர்ந்தார். இவ்வாலையில், அவர்கள் படித்து, ஒவியக்கலையையும், சிற்பக்க்கலையையும், காலணித் தயாரிப்பு நுட்பத்தையும் கற்றுக்கொண்டனர்.
1993ம் ஆண்டு, Champa Tsondre, கடந்த பல்லாண்டுகளில் சிக்கனமான முறையில் வாழ்க்கை நடத்தியதால் சேமிக்கப்பட்ட 4 லட்சம் யுவானைக் கொண்டு லாசா நகரில் அனாதைகளையும் ஊனமுற்றக் குழந்தைகளையும் தத்தெடுக்கும் சிறப்புப் பள்ளியை நிறுவினார். இதற்குப் பின், அவர், இப்பள்ளியின் வேந்தராக மாறினார்.
இந்த அனாதைகள், ஊனமுற்றக் குழந்தைகள், கடும் வறுமைக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் பள்ளிக்குப் போவதற்குத் தேவைப்படும் உளவு, உறைவிட மற்றும் கல்வி கட்டணங்களை அவர் வழங்குகின்றார். இது மட்டுமல்லாமல், திபெத் பாணி ஓவியம், தேசிய இன ஆடை திபெத் கடுதாசி, திபெத்திய மணம் மரச்செலுத்து கலை முதலிய பாரம்பரிய கைவினை செய்முறை நுட்பங்களை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்துள்ளார். இக்குழந்தைகளை, சுயசார்புடன் வாழ்ந்து சமூகத்துக்கு பயன் தருவோராகப் பயிற்றுவிக்க வேண்டும் என்று அவர் சொன்னார். அவர் கூறியதாவது:
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நான் இரண்டு மணிநேரம் குழந்தைகளுக்கு கடந்த காலம் பற்றி கூறுகின்றேன். அதாவது, பழைய திபெத்தில் அனாதைகளும் ஊனமுற்றவர்களும் கவனிக்கப்படாமல், இன்னல் வாழ்க்கையில் அல்லப்பட்டனர். இன்று நாம் இன்ப வாழ்க்கை நடத்துகின்றோம். புதிய சமூகத்துக்கு நன்றி கூற வேண்டும். காய்நாட்டை வளர்க்க, நன்றாக படிக்க வேண்டும். எனது அறிவுறுத்தல் அவர்களின் படிப்புக்கு ஊக்கமளிக்கின்றது. பள்ளியில் பட்டதாரியாகிய பின், பல குழந்தைகள் சிறந்த பள்ளியில் சேர்ந்தனர். அவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றனர். சமூகத்தால் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டனர் என்றார்.
1 2 3
|