
இன்று இப்பள்ளியில் மொத்தம் 145 மாணவர்கள் இருக்கின்றனர். Champa Tsondre தமது குழந்தைகளை பேணிக்காப்பது போலவே, இந்த குழந்தைகளை நேசிக்கின்றார். எனவே, இக்குழந்தைகள், அவரை வேந்தர் என ஒருபோதும் அழைக்கவில்லை. மாறாக, அப்பா என்று கூப்பிடுகின்றனர். சிறு வயதிலிருந்தே தந்தையை இழந்த Droje Tseten, அவரது ஒரு மாணவர். 6வது வயதில் தாயும் மரணமடைந்தார். அவர் அனாதையானார். தற்செயலாக கிடைத்த வாய்ப்பில், அவர் Cai Quan பள்ளிக்கு வந்தார். அவர் நினைவுகூர்ந்ததாவது:
"பள்ளிக்கு வந்து, இவ்வளவு பெரும் குடும்பத்தில் இருப்பது, முதல் தடவை. இவ்வளவு அதிகமான சகோதரர்கள்-சகோதரிகள் இருப்பது, முதல் தடவை. கவலைப்படாமல் வயிறார சாப்பிட முடிந்தது, முதல் தடவை. அகலமான வகுப்பறையில் நுழைவது, முதல் தடவை. ஆசிரியர்களைப் பார்ப்பது, முதல் தடவை. புத்தம் புதிய பாடநூல்கள் கிடைப்பது முதல் தடவை. எனது தாய்நாடு, சீனா என்று அறிந்து கொள்வது முதல் தடவை. இது வரை நான் இப்பள்ளியில் 6 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். நானும் எனது சகமாணவர்களும் இங்கு பல பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளோம்." என்றார்.

Champa Tsondreஇன் அறக்கொடை நடவடிக்கை, உள்ளூர் அரசின் ஆதரவைப் பெற்றுள்ளது. குழந்தைகளின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க, உள்ளூர் அரசு, ஒவ்வொரு குழந்தைக்கும் திங்கள்தோறும் 200 யுவான் வாழ்க்கைக்கான உதவித்தொகையை வழங்குகின்றது. நோய்வாய்ப்பட்டால், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
அவரது மனமுருகும் செயல், பள்ளிக்கு அதிகமான ஆசிரியர்களை ஈர்த்துள்ளது. மேலதிகமான அனாதைகளுக்கும் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் அன்பு மற்றும் அறிவு அளிக்கும் வகையில், ஆசிரியர்கள் பலர், சுய விருப்பத்துடன் பள்ளிக்கு வந்துள்ளனர். Dekyi Zholma அம்மையார், அவர்களில் ஒருவராவார். அவர் கூறியதாவது:
நான் கற்பிப்பதில் ஈடுபட்டு பத்தாண்டுகள் கழிந்துள்ளன. Cai Quan நலத்துறை பள்ளிக்கு வந்து ஓராண்டுக்கு மேலாகியது. இதர பள்ளிகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில், இப்பள்ளி முற்றிலும் வேறுபட்டது. இங்குள்ள ஊனமுற்ற மாணவர்களில், காதுகேளாதோர், கண்பார்வையற்றோர் இருக்கின்றனர். சிலர், அனாதைகள். சில குழந்தைகள் பத்து வயதாகிய போதிலும், பள்ளிக்குப் போகவில்லை. இருப்பினும், சில குழந்தைகள், மிகவும் சுறுசுறுப்பாக படிக்கின்றனர். இங்கு ஆசிரியராக இருப்பது எனது வாழ்நாள் முழுவதிலும் பெருமை, புகழ். என் பணியில் நான் இரட்டை மடங்கு முயற்சி செய்வேன் என்றார்.
ஊனமுற்றவர்களும் அனாதைகளும் ஒரு சிறப்புக் குழுவினர்கள். கற்பித்தல் போக்கில், பிற இடங்களின் முன்னேறிய கற்பித்தல் முறையையும் அனுபவங்களையும் பயன்படுத்தி, திபெத்தின் நடைமுறையுடன் இணைத்து Champa Tsondre சொந்த கற்பித்தல் முறையை உருவாக்கினார். மாணவர்களின் விவேகத்துக்கிணங்க, அவர் ஆசிரியர்களுடன் சேர்ந்து, வேறுபட்ட கற்பித்தல் திட்டத்தையும் இலக்கினையும் வகுத்தனர். இது கற்பித்தல் தரத்தை பெரிதும் உயர்த்தியுள்ளது. இப்பள்ளியிலிருந்து பட்டதாரியாகிய மாணவர்கள், உள் பிரதேசங்களின் சீனியர் இடைநிலைப்பள்ளிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் நுழைந்தனர். 1 2 3
|