• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-22 19:54:36    
ததர் இனத்தின் மொழிப் பண்பாடு

cri

சிங்கியாங் உய்குர் தன்னாட்சிப் பிரதேசத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் முஸ்லிம் இனங்களில், ததர் இனம், குறைவான மக்கள் தொகையுடைய ஒரு இனமாகும். தவிரவும், சீனாவின் 55 சிறுபான்மை தேசிய இனங்களில் குறைவான மக்கள் தொகையுடைய இனங்களில் ஒன்றாகும். அதன் ஆறாயிரம் இனத்தவர்கள் சிங்கியாங்கின் பல்வேறு இடங்களில் சிதறி வாழ்கின்றனர். மக்கள் தொகை அதிகமில்லை என்ற போதிலும், ததர் இனத்தின் மொழிப் பண்பாடு எப்பொழுதும் சொந்த தனிச்சிறப்பியல்புடையதாக உள்ளது. வயது வந்தோரில் எழுத படிக்கத் தெரியாதவர் ஒருவருமில்லை. ததர் இன மக்கள், கல்வியில், குறிப்பாக குடும்பக்கல்வியில் கவனம் செலுத்துவது இதற்கு காரணமாகும். எமது செய்தியாளர் சிங்கியாங்கின் இ லீங் கஜக்ஸ்தான் தன்னாட்சி மண்டலத்தின் இ நிங் நகரில், வாழ்நாள் முழுவதிலும் கல்வியில் ஈடுபட்டுள்ள ததர் இன முதியோர் Ilyarஐப் பேட்டி கண்டார்.

72 வயதான இம்முதியவரும், அவரது குடும்பத்தினரும் இ நிங் நகரின் வடபகுதியில் உள்ள வீட்டில் வசிக்கின்றனர். அகலமான ஒளிமயமான வரவேற்பு அறையில், ததர் இனத்தின் குடும்பக் கல்வி பற்றி குறிப்பிட்ட போது, Ilyar வாயார பேசினார். அவர் கூறியதாவது:

"இப்போது ததர் மொழி கற்பிக்கும் சிறப்பு பள்ளி இல்லை, இருப்பினும் ததர் மொழிப் பண்பாட்டினை நாங்கள் நிலைநிறுத்தி வந்துள்ளோம். குடும்பக் கல்வியில் கவனம் செலுத்துவது இதற்குக் காரணமாகும். குழந்தைகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம். மூன்று, நான்கு வயதடைந்த குழந்தைகள் பள்ளியில் சேராத போதிலும், அவர்கள் ததர் மொழியில் பேச முடியும், புரிந்து கொள்ள முடியும்" என்றார்.

1  2  3