
மொழிப் பண்பாடு, ஒரு தேசிய இனத்தின் முக்கிய அடையாளமாக விளங்குகின்றது என்பதையும், ஒவ்வொரு தேசிய இனமும், சொந்த இனத்தின் மொழிப் பண்பாட்டை கையேற்று வெளிக்கொணர வேண்டும் என்பதையும் அனைத்து தேசிய இனங்களும் புரிந்து கொள்ள வேண்டும் என இம்முதியவர் கருத்துத் தெரிவித்தார்.
Ilyar இன் மனைவி, உஸ்பெக் இனத்தவர். அவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்கும் வகையில், மனைவியும் ததர் மொழியைக் கற்றுத் தேர்ந்தார். குடும்பத்தினர் வீட்டில் இருக்கும் போது ததர் இன மொழியைத் தான் பேச வேண்டும் என்று Ilyar கோரியுள்ளார்.
மகள் Ilfira, இப்போது சிங்கியாங் பல்கலைக்கழகத்தில் சுற்றுலா நிர்வாகத் துறையில் படிக்கிறார். ததர் மொழி, ஹன் மொழி, உய்குர் மொழி, ரஷிய மொழி, ஆங்கில மொழி ஆகிய 6 மொழிகளில் அவரால் பேச முடியும். அன்றி ஜப்பானிய மொழியையும் அவர் கற்று வருகிறார். இவ்வளவு அதிகமான மொழியைக் கற்றுக்கொள்ள, பட்டதாரியாகிய பின், சர்வதேச சுற்றுலா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே காரணமாகும் என்று அவர் கூறினார். ததர் மொழிப் படிப்பு பற்றிக்குறிப்பிட்ட போது அவர் கூறியதாவது:
"எங்கள் அயலாளர்கள் அனைவரும், உய்குர் இனத்தவர்கள். ததர் மொழி அவர்களுக்குத் தெரியாது. வீட்டில் இருக்கும் போது, ததர் மொழியில் பேச வேண்டும் என்று, தாயும் தந்தையும் எங்களைக் கோரியுள்ளனர். எனது நிலைவில், சிறு வயதில் நான் உய்குர் மொழியில் தந்தையுடன் பேசினால், அவர் என்னை அலட்சியம் செய்வார்" என்று கூறினார்.
1 2 3
|