• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-22 19:54:36    
ததர் இனத்தின் மொழிப் பண்பாடு

cri

ததர் இனம் கல்வியில் கவனம் சொலுத்தும் பாரம்பரியம் நீண்டகாலமுடையது. இதோ, ஒரு வார்த்தை, ததர் இனத்துக்கும் கல்விக்குமிடை உறவை வர்ணிக்கின்றது. அதாவது, ததர் இன மக்கள் வாழும் இடமெங்கும் பள்ளிகள் இருப்பது கட்டாயம். பள்ளிக்கூடம் இல்லாமலிருந்தால், ததர் மக்கள் ஒரு பள்ளியை நிறுவுவார்கள். கல்வி பெறும் வாய்ப்பில், ஆண்களும் பெண்களும் சமமானவர்கள். ததர் இனத்தின் புகழ் பெற்ற கல்வியாளர் Habudulah Bubin பேசுகையில், ஒரு தாய் எழுதவாசிக்கத் தெரியாதவர் என்றால், அவரால் திறமைசாலிகளைப் பயிற்றுவிக்க முடியாது. எனவே, தாய் என்றால், முதன்முதலில் கல்வியைப் பெறத் தான் வேண்டும் என்றார். 1915ம் ஆண்டு முதலாவது ததர் மகளிர் பள்ளிக்கூடம் நிறுவப்பட்டது. ததர் இன உய்குர் இன மற்றும் கஜகஸ் இன பெண்கள் இதில் சேர்க்கப்பட்டனர். இப்பள்ளி, சிங்கியாங்கில் நீண்ட காலத்திற்கு முன்பே நிறுவப்பட்ட மகளிர் பள்ளியாகும்.

சீன அரசின், குறிப்பாக, குறைவான மக்கள் தொகையுடைய தேசிய இன வளர்ச்சிக்கு உதவுவதென்றக் கொள்கையின் ஆதரவுடன், ததர் இனத்தின் மொழிப் பண்பாடு கையேற்றப்படச் செய்யும் வகையில், ததர் இனத்தின் குடும்பக் கல்வி, சமூகத்தில் பரவத் துவங்கியுள்ளது. இ லி ததர் இனப் பண்பாட்டு ஆய்வகம் 2020ம் ஆண்டு முதல் இ நிங் நகரில் ததர் மொழி எழுத்து பயிற்சி வகுப்பை நடத்தியுள்ளது. அவர் கூறியதாவது:

"சீன அரசியல் அமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டவாறு, ஒவ்வொரு தேசிய இனமும், சொந்த இனத்தின் மொழி எழுத்துகளைப் பயன்படுத்தி, கல்வியைப் பெறும் அதிகாரத்தை உணர்வுப்பூர்வமாகச் செயல்படுத்தும் வெளிப்பாடாக இப்பயிற்சிப் பணி எடுத்துக்காட்டுகின்றது. சீனாவின் தேசிய இனக் கொள்கையால், இ லி ததர் இனத்தின் மொழி எழுத்து, கையேற்றப்பட்டு வளர்ச்சியடைந்துள்ளது". எமது செய்தியாளருடன் அங்கு பயணம் மேற்கொண்டுள்ள ததர் இனப் பண்பாட்டு ஆய்வகத்தின் தலைமைச் செயலர் Haizatula செய்தியாளருக்குத் தெரிவித்தார்.

பலர் இவ்வகுப்பில் கலந்து கொண்டனர். அவர்களில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 6, 7 வயது குழந்தைகளும் இருக்கின்றனர் என்று தெரிய வருகின்றது.

ததர் இனம், தனது மொழிப் பண்பாட்டைக் கையேற்ற மேற்கொண்டுள்ள முயற்சி. ஏராளமான கனிகளைப் பெற்றுள்ளது. அன்றி, சர்வதேசச் சமூகத்தின் பாராட்டினையும் பெற்றுள்ளது. 2003ம் ஆண்டு பிப்ரவரியில், அழைப்பின் பேரில், Ilyar ரஷியாவின் Tatarஸ்தான் குடியரசுக்குச் சென்ற போது, இன்னாட்டின் அரசுத் தலைவர் அவரை சந்தித்துரையாடினார். சுத்த ததர் மொழியில் பேசிய Ilyarஐ, அரசுத் தலைவர் Shaimief வியந்து பாராட்டினார். முதியவர் அறிமுகப்படுத்தியதைக் கேட்டு, சீனாவின் இ லி ததர் இனம், சொந்த மொழிப் பண்பாட்டை நிலைநிறுத்துவதில் மேற்கொண்ட முயற்சியை அரசுத் தலைவர் வெகுவாகப் பாராட்டினார். தவிரவும் Tatarஸ்தான் குடியரசில் இலவச உயர் நிலை கல்வியைப் பெற, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புமாறும் அவர் கேட்டுக்கொண்டார். 2005ம் ஆண்டு, பயிற்சி வகுப்பிலுள்ள 28 மாணவர்கள் அங்கு சென்று கற்றுக்கொண்டனர். அவர்களில் Ilyarஇன் மகன் Ildar ஒருவராவார்.


1  2  3