• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-20 08:07:54    
சாங் சுன் நகரில் குளிர்கால நீச்சல் மீது ஆர்வம் மிக்க மக்கள்

cri

ஜி லின் மாநிலத்தின் சாங் சுன் நகரம், சீனாவின் வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. குளிர்காலத்தில் அங்கே சராசரியான தட்பவெப்ப நிலை பூஜியம் டிகிரி செல்சியஸுக்கு கீழ் உள்ளது. கடந்த நூற்றாண்டின் 60ஆம், 70ஆம் ஆண்டுகளில் இருந்து, சாங் சுன் நகரிலுள்ள பலர் குளிர்கால நீச்சலில் சுறுசுறுப்பாக ஈடுபடுகின்றனர். வெப்பமான கோடைக்காலத்தில் நீச்சலடிப்பது அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் என்றால், குளிர்காலத்தில், கடும் குளிரான காற்றோடு பனி உறைந்த நீர் பரப்பில் நீச்சலடிப்பது சோதனையாக கூறப்படலாம்.

60 வயதான சாங் சுன் நகரவாசி வாங் லியே, குளிர்கால நீச்சல் மீது ஆர்வம் மிக்கவர் ஆவார். செய்தியாளரிடம் அவர் கூறியதாவது—

"குளிர்காலம் வந்ததும், வட கிழக்கு சீனாவில் நீர் உறைகின்றது. நாங்கள் அனைவரும் முன்முயற்சியுடன் உறைந்த நீர் பரப்பில் 30 முதல் 50 வரையான சதுர கிலோமீட்டர் பரப்பளவு இடத்தை உடைத்து, அங்கே நீச்சலடிக்கின்றோம்" என்றார் அவர்.

குளிர்கால நீச்சல் விரும்புவோர் குளிர்கால நீச்சலை ரத்தக் குழாய் ஜிம்னாஸ்டிக்ஸ் என அழைக்கின்றனர். இந்த உடற்பயிற்சி, இதய ரத்தக்குழாய் நோயைத் தடுப்பதற்குத் துணை புரியம்.

தொடக்கத்தில் சாங் சுன் நகரில் 7, 8 பேர் மட்டுமே குளிர்கால நீச்சலடிப்பதில் உறுதியாக ஈடுபட்டனர். பின்னர் இந்த எண்ணிக்கை 10க்கு மேல் அதிகரித்தது என்று வாங் லியே கூறினார். 1988ஆம் ஆண்டில் அவர்கள் முன்முயற்சியுடன் குளிர்கால நீச்சல் சங்கத்தை உருவாக்கியதோடு, இந்த அணியைப் பெருக்கவும் மன உறுதி பூண்டிருந்தனர். இன்று வரை 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. இச்சங்கத்தின் முயற்சியுடன், சாங் சுன் நகரில் குளிர்கால நீச்சலை விரும்புவோரின் எண்ணிக்கை 300க்கு மேலாக அதிகரித்துள்ளது.

1  2  3