• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-20 08:07:54    
சாங் சுன் நகரில் குளிர்கால நீச்சல் மீது ஆர்வம் மிக்க மக்கள்

cri

இந்நிகழ்ச்சியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கண்டு, குளிர்கால நீச்சல் நிகழ்ச்சியைத் துவங்கியவர்களி்ல் ஒருவரான வாங் லியேயின் மனதில் சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அதே வேளை, குளிர்கால நீச்சலடிப்பதற்கான வசதி 10க்கும் ஆண்டுகளுக்கு முன்பை விட பெருமளவில் மேம்பட்டிருப்பதைக் கண்டு அவர் மகிழ்ச்சி அடைகிறார்.

"முந்தைய நிலை கடினமானது. தனி அறைகள் ஏதும் இல்லை. வெளியே ஆடைகளை மாற்றினோம். அப்போது நாங்களாகே நீர் பரப்பில் 2, 3 மணிநேரத்தில் பனியை உடைக்க வேண்டியிருந்தது. நீரில் 4, 5 நிமிடங்கள் நீச்சடித்தோம். தற்போதைய நிலை மேம்பட்டுள்ளது. குளிர்கால நீச்சல் மன்றம் நிறுவப்பட்டு, ஆடைகளை மாற்றும் அறையில் வெப்ப வாயு இருக்கிறது. சிறப்புப் பணியாளர்கள் எங்களுக்காக பனியை உடைக்கின்றனர்" என்றார் அவர்.

நான்ஹு ஏரியில் அமைந்துள்ள குளிர்கால நீச்சல் பிரதேசத்தில் 50 வயதான வாங் சிங் வென், நீச்சலடிக்கத் தயாராக இருந்ததை செய்தியாளர் கண்டார். ஏரியில் உள்ள படகு ஒன்றைக் சுட்டிக்காட்டிய வண்ணம் திரு வாங் செய்தியாளரிடம் பேசுகையில், இந்தப் படகு குளிர்கால நீச்சலை விரும்புவோருக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது என்றார்.

"அந்தப் படகு, பனி உடைக்கும் படகு என அழைக்கப்படுகிறது. அது அசையும் போது அலை ஏற்பட்டு, மெல்லிய பனி நீரில் உருகும். ஆனால் அடர்த்தியான பனி உடைக்கப்பட வேண்டும்" என்றார் அவர்.

சிறு மரப் பாலத்தில் நடந்த பின், வாங் சிங் வென் நீரில் குதித்தார். சில நிமிடங்கள் மட்டுமே அவர் நீரில் தங்கி நீச்சலடித்தார் என்ற போதிலும், இது எளிதானது அல்ல. சீனாவின் வட பகுதியில், நீர் விரைவில் பனியாக மாறிவிடும். மக்கள் பஞ்சு ஆடையையும் பஞ்சு கால் சட்டையையும் அணிந்தாலும், போதுமான அளவில் கதகதப்பாக இருப்பதை உணர்வது கடினம். ஆனால் குளிர்கால நீச்சல் விரும்புவோர் பனி நீரில் நீச்சலடிக்க முடியும் என்பது மற்றவருக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. இது குறித்து குளிர்கால நீச்சல் விரும்பிய மற்றொரு நபர் சுயே சியௌ பூ அம்மையார் கூறியதாவது—

"குளிர்கால நீச்சல், உண்மையிலேயே குளிராக இருக்கிறது. மக்களுக்கு இது சோதனையாகவும், உடற்பயிற்சியாகவும் இருக்கிறது. அனைவரும் இதில் ஈடுபடுவதில்லை" என்றார் அவர்.

1  2  3