கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட நீரில் குளிப்பது, குளிர்கால நீச்சல் விரும்புவோர் நீச்சலடித்து கரையில் ஏறிய பின் செய்யும் முதல் செயலாகும். குளிர்கால நீச்சல், குளிர் நீர் குளிப்பு ஆகியவற்றைக் கண்டு மட்டுமே, சாதாரண மக்கள் குளர்ச்சியை உணர்கின்றனர். ஆனால் குளிர்கால நீச்சல் விரும்புவோருக்கு இது சாதாரண விஷயமாகும். துணிச்சல் மிக்கவரின் விளையாட்டில் ஈடுபட்டு, தமக்கு சவால் விடும். இயற்கையை ஆராய்வதாக அவர்கள் கூறினார்கள்.
சாங் சுன் நகரில் உள்ள குளிர்கால நீச்சல் விரும்புவோரைப் பொறுத்த வரையில், குளிர்கால நீச்சல், உடற்பயிற்சி செய்யும் ஒரு வகை மட்டுமல்ல, கவிதை மற்றும் ஓவியம் போன்ற அழகு நிறைந்த வாழ்க்கையும் ஆகும். மேற்கூறிய திரு வாங் லியே கவிதை ஒன்றை எழுதி, குளிர்கால நீச்சல் மீதான தமது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
குளிர்கால நீச்சல் விரும்புவோர் சுன் மன் பின் 50 வயதானவர். குளிர்கால நீச்சல் சங்கத்துக்கு அவர் பாடல் ஒன்றை இயற்றினார். உறைபனி பெய்து வடக்கத்தியக் காற்று புன்னகையுடன் வீசுகிறது. குளிர்கால நீச்சல் விளையாட்டு வீரர்கள் நீரில் குதிக்கின்றனர். பனியையும் அலையையும் உடைத்து, கடுமையான குளிருடன் போட்டியிடுகின்றனர். அவர்கள் வெள்ளி டிராகன் போல் நீச்சலடிக்கின்றனர் என்று அந்தப் பாடல் ஒலிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், புத்தாண்டு உள்ளிட்ட விழாக்களில் குளிர்கால நீச்சல் விரும்புவோர் பெரிய ரக குளிர்கால நீச்சல் அரங்கேற்றம் வழங்குகின்றனர். குளிர்கால நீச்சல், சாங் சுன் நகரில் குளிர்காலக் காட்சியாக மாறியுள்ளது என்று சுன் மன் பின் கூறினார்.
"ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி திங்கள் முதல் நாள், குளிர்கால நீச்சல், சாங் சுன் நகரின் நிரந்தர அரங்கேற்றம் என்ற முறையில், புத்தாண்டின் தொடக்கத்தை கொண்டாடுகிறது" என்றார் அவர். 1 2 3
|