• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-29 11:03:18    
ஜிங் இனக் கிராமமான வாங் வே

cri

கடல் அலைகளின் ஓசையுடன் கூடிய தென் சீனாவின் ஜிங் இன மக்கள் கூடிவாழும் ஜிங் இன மூன்றுத் தீவுகள் என்ற எழிலான தீபகற்பத்துக்கு எமது செய்தியாளர் சென்றிருந்தார். வியட்நாமுக்கும் இதற்குமிடையில் ஒரு ஆறு மட்டும் உண்டு. வெகு காலத்துக்கு முன்பே, இத்தீபகற்பம், மூன்று தீவுகளால் உருவாயிற்று. இன்று கடற்கரையும் நீரிணையும் சமன்படுத்தப்பட்டு, மூன்று தீவுகளும் ஒன்றிணைந்துள்ளன. இருப்பினும், "ஜிங் இன மூன்றுத் தீவுகள்" என்ற பெயர் நீண்டகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. மூன்றுத் தீவுகளின் கடைகோடி தெற்கு பகுதியில் வாங் வே என்னும் சிறிய மீன்பிடி கிராமம் உள்ளது.

இக்கிராமத்தில் நுழைந்து பார்க்கும் போது வெளிநாட்டு பாணியுடைய மாடி கட்டடங்கள் வரிசையாக பாதையின் இருமருங்கிலும் நிற்கின்றன. பலரின் வீடுகளுக்கு முன் புத்தம் புதிய கார்கள் நின்றுள்ளன. கிராமத்தில் போக்குவரத்து வசதியாயுள்ள து. வாகனம் வாகனமாக மீன்கள் இறால் ஆகியவை நகருக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. வாங் வே கிராமத்தின் கட்சிக்கிளை செயலர் செய்தியாளரிடம் பேசுகையில், 20, 30 ஆண்டுகளுக்கு முன், வாங் வே கிராமம், இன்னமும் பின்தங்கிய நிலையில் உள்ள ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்தது என்றார். தலைமுறை தலைமுறையாக கடலோரத்தில் வாழும் கிராமவாசிகள், கடலில் மீன்பிடிப்பதன் மூலம் வாழ்க்கை நடத்தினர். கடலோர நிலம் அதிகம் உவர் நிலமாக இருப்பதால், தானியம் பயிரிடுவது கடினம். தானியம் கிடைக்க, வழக்கமாக, பல பத்து தூரத்தைக் கடந்து மலைப்பிரதேசத்துக்கு போய் பிடித்த மீன்களையும் இறால்களையும் கொண்டு தானியம் பெற வேண்டியிருந்தது.

"கடந்த நூற்றாண்டின் 70ம் ஆண்டுகளில், எங்கள் வாங் வே கிராமம் தனியொரு தீவு ஆகும். அங்கு போக்குவரத்து வசதியாயில்லை" என்றார்.

1  2  3