
வாங் வே கிராமம், பின்தங்கிய நிலையிலுள்ள ஒரு சிறிய மீன்பிடிப்பு கிராமமாக இருந்து இன்றைய வளமான கிராமமாக வளர்ந்துள்ளதற்கு காரணம் என்ன? 20 ஆண்டுகளுக்கு மேலாக, சீன அரசின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையின் செல்வாக்கில், மீன்பிடிப்பு மூலம் இனி வாழ்க்கை நடத்த முடியாது என்றும், தத்தமது மேம்பாட்டைக் கொண்டு, வளமடைவதற்கான வழிமுறையைக் கண்டறிய வேண்டும் என்றும் வாங் வே கிராமவாசிகள் உணர்ந்து கொண்டுள்ளனர். கடலோர, எல்லையோர நிலைமைகளைப் பயன்படுத்தி, சில கிராமவாசிகள், நிர்வாழ்வன வளர்ப்பு, கடல் உற்பத்திப் பொருளின் பதனீடு முதலிய தொழில்கள் வளர்ச்சியுறச்செய்யத் துவங்கினர். வேறு பலர், வியட்நாம் மொழி பேச முடியும் என்ற மேம்பாட்டை சாதகமாகப் பயன்படுத்தி, எல்லை வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடத் துவங்கினர். வாங் வே கிராமத்திலுள்ள ஜிங் இன வணிகர் Liang Shao De இத்தொழில்களைச் சார்ந்து வளமடைவதில் முன்னோடியாகத் திகழ்கின்றார்.
இவ்வாண்டு 38 வயதான அவர், வாங் வே கிராமத்தில், கடல் உற்பத்திப் பொருளின் பதனீடு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள முதலாவது ஜிங் இனத் தவராவார். பத்து ஆண்டுகளுக்கு மேலான காலத்துக்கு முன், அவர் இதர கிராமவாசிகளைப் போலவே, நாள்தோறும் மீன்பிடிப்பதைச் சார்ந்து வாழ்க்கை நடத்தினார். தநியோரு மீன்பிடிப்பு மூலம் மட்டுமே, குடும்பத்தினர்களுக்கு சீரான வாழ்க்கையை ஏற்படுத்த முடியாது என்பதை புரிந்து கொண்ட பின், வளமடையும் இதர வழிமுறைகளை யோசிக்கத் துவங்கினார்.
"அப்போது மற்றவரை விட நான், அதிகமான மீன்பிடிக்க முடிந்தது. துவக்கத்தில் மீன் விற்பனையாளருக்கு விற்றேன். பின்னர், நானே விற்கத் துவங்கி, நல்ல வருமானம் கிடைக்கப் பெற்றேன். இதனால், மீன்பிடி படகை விற்றேன். வியாபாரம் செய்யத் தொடங்கினேன். ஷாங்காய், பெய்சிங் முதலிய இடங்களிலுள்ள அந்நிய உரிமையாளர்கள், விமானம் மூலம் மீன் மற்றும் இறால்களை அனுப்புமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர். படிப்படியாக நான் நெருங்கிப் பழகியவர்கள் அதிகமாக அதிகமாக, வியாபாரம் விறுவிறுப்பாகி வருகின்றது" என்றார், அவர்.
1 2 3
|