
இன்று Liang Shao Deக்கு, சொந்தக் கடல் உற்பத்திப் பொருள் விற்பனைக் கூட்டு நிறுவனம் இருக்கின்றது. 100க்கும் அதிகமான உள்ளூர் கிராமவாசிகள் இதில் தொழிலாளர்களாகப் பணிபுரிகின்றனர். அவரது விற்பனைத் தொடரமைப்பும், படிப்படியாக விரிவடைந்துள்ளது. அவரது கடல் உற்பத்திப் பொருட்கள் தென் கிழக்குச் சீனாவின் ப்ஜிங், தைவான் முதலிய இடங்களில் விற்பனையாகின்றன. தவிரவும், வியட்நாமில் இரண்டு இழுது மீன் பதனீட்டு ஆலைகளை நடத்தினார். பதனிடப்பட்டு சிப்பம் கட்டப்பட்ட இழுது மீன் சீனாவுக்குத் திரும்பக் கொண்டு வந்து ஷாங்காய், சாங் துன் மற்றும் பெய்சிங் கொள்வனவு வணிகர்களுக்கு விற்றார். தரமான இழுது மீன்களை தென் கொரியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளார். எல்லை வர்த்தகத்தின் நல்ல வாய்ப்பு காரணமாக, கடந்த ஓராண்டில் மட்டும் தாம், 17 லட்சம் யுவான் சம்பாதித்ததாக அவர் தெரிவித்தார். தற்போது, வியாபாரத்தை மேலும் விரிவாக்கும் பொருட்டு, ஒரு கோடி யுவான் முதலீடு செய்து, உறைநிலை வசதி கொண்ட ஆலை ஒன்றைக் கட்டியமைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இப்போது, வாங் வே கிராமத்தின் ஆயிரம் ஜிங் இனக் குடும்பங்கள் பெரும்பாலும், கடல் உற்பத்திப் பொருட்களைப் பதனிடுதல், நீர்வாழ்வன வளர்ப்பு முதலியத் தொழில்களில் ஈடுபடுகின்றன. பாரம்பரிய மீன்பிடி வாழ்க்கையில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வாங் வே கிராமத்தின் நுழைவாயிலில், கம்பீரமானக் கட்டிடம் ஒன்றை எங்களின் கவனத்தை ஈர்த்தது. வெள்ளைச் சுவரும் செங்கல்லும் உடைய இக்கட்டிடத்தின் மேலே தொங்கவிடப்பட்ட துணிக்கொடியில் "Ha Ting" என்னும் இரண்டு பெரிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஜிங் இனத்தவர்கள், கடவுள் மீது வழிபாடு செய்யும் இடம், இது என்று கிராமக் கட்சிக் கிளைச் செயலர் சு மிங் பான் எங்களிடம் தெரிவித்தார். 500 ஆண்டுகளுக்கு முன், ஜிங் இனத்தின் முன்னோடிகள் வியட்நாம் நாட்டிலிருந்து தற்போதைய ஜிங் இன மூன்றுத் தீவுகள் அமையும் வட்டாரத்தில் குடியேறினர். இப்போது, சீனா முழுவதிலும் இரு பதாயிரத்துக்கும் அதிகமான ஜிங் இன மக்கள் மட்டுமே இருக்கின்றனர். இருந்த போதிலும், ஆண்டுதோறும் ஜூன் திங்களில் ஜிங் இன மக்கள் "Ha Ting" என்ற இடத்துக்கு வருகை தந்து, சிறப்பான வழிபாட்டுப் பாடலைப் பாடி, கடவுள் வழிபாடு செய்து, ஜிங் இனத்தின் மிகவும் விமரிசையான Ha Ting விழாவைக் கொண்டாடி மகிழ்வார்கள்.
இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, ஜிங் இனத்தவர்கள் Ha Ting விழாவில் பாடும் வழிபாட்டுப் பாடலாகும். உள்ளூர் ஜிங் இன மக்கள் இத்தகைய பாடலை, "Ha Ting" என அழைக்கின்றனர். இன்று வாங் வே கிராமத்தில் இப்பாடலைப் பாடக் கூடியவர்கள் அற்பர். காரணம், வாங் வே கிராமவாசிகள் வளமடைந்துள்ளனர் என்பதாகும். ஜிங் இனப் பண்பாட்டைக் காப்பாற்றுவதற்காக ஜிங் இனப் பொருட்காட்சியகத்தைக் கட்டியமைக்க வாங் வே கிராமம் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத் தலைமுறையினர் ஜிங் இனத்தின் கடந்த கால வாழ்க்கை மற்றும் உற்பத்தியை அறியச் செய்வது இப்பொருட்காட்சியகத்தின் நோக்கம். 1 2 3
|