• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-05 16:13:58    
மூன்று தலைமுறையினர்களின் திருமண விழா

cri

உஸ்பெக் இன மங்கை

சீனாவில் அனைவரும் கேட்க விரும்பும் சிங்கியாங் நாட்டுப்புறப்பாடல், இதுவாகும். வழக்கமாக திருமண விழாவில் இது பாடப்படுகின்றது. இருப்பினும், இது உஸ்பெக் இனத்தின் நாட்டுப்புற பாடலைத் தழுவி அமைக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டவர்கள், மிகக்குறைவு.

உஸ்பெக் இனம், சீனாவில் இஸ்லாமிய மத நம்பிக்கை கொள்ளும் பத்து சிறுபான்மைத் தேசிய இனங்களில் ஒன்றாகும். அவர்கள், முக்கியமாக சீனாவின் சிங்கியாங் வைகூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தெற்கு பகுதியில் சிதறி வாழ்கின்றனர். எமது செய்தியாளர், அங்குள்ள காஷ் பிரதேசத்து Sha Che மாவட்டத்திலுள்ள அப்லேமிஜிதி வீட்டில், மூன்று தலைமுறையினர்களின் திருமண விழா மூலம், உஸ்பெக் இன மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அறிந்து கொண்டார்.

செய்தியாளர் இவ்வீட்டிற்கு வருகை தந்த நாள், அப்லேமிஜிதியின் இளம் மகள் மேரேயி திருமணம் செய்யும் நாளாகும். திருமண வழக்கத்தின் படி, திருமண விழா, மணமகள் வீட்டில் நடைபெற வேண்டும். எனவே, குடும்பத்தினர்கள் அனைவரும் இதற்காக சுறுசுறுப்பாக இருக்கின்றனர்.

மணமகள், வெள்ளை நிற நீண்ட பாவாடை அணிகின்றார். மினுமினுவென்ற பொருட்களை உடைய வெள்ளை நிறத் துணி அவரது தலையில் கட்டப்பட்டுள்ளது. பாட்டியார் பக்கத்தில் சாய்ந்து திருமணம் செய்வதற்கு முன் மணமகள் அறிய வேண்டிய விஷயங்களை அவர் செல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார். மணமகள் மழலையர் இல்ல ஆசிரியை. மணமகனோ, கணிணி வரைவு வல்லுநர். இருவரும இரண்டு ஆண்டுகளுக்கு முன் நெருங்கி பழகி காதலிக்கத் துவங்கினர். அறையில் பாட்டொலியும் சிரிப்பும் நிறைய கேட்கப்படும் போது, சன்னலுக்கு முன்னாலுள்ள முற்றத்தில் போடப்பட்ட தரைக்கம்பளத்தில் ஆண் குடும்பத்தலைவரும் ஆண் விருந்தினர்களும் சுற்றிவளைத்து அமர்ந்து நரம்புகளைக் கொண்ட இசைக்கருவியை இசைத்து பாடிக்கொண்டே இருக்கின்றனர்.

1 2 3