• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-05 16:13:58    
மூன்று தலைமுறையினர்களின் திருமண விழா

cri

பின்னர், பெண்கள் பாடத்துவங்கினர். அவர்கள் பாடிய வரிகளின் அர்த்தம் தெரியாத போதிலும், மிகழ்வூட்டும் இசையின் ராகத்திலிருந்து, மணமகள் மற்றும் மணமகனுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர் எனத் தெரிய வருகின்றது.

மலரும் முகத்துடன் இன்பக் கடலில் மூழ்கிய மணமகளின் பாட்டியாரை செய்தியாளர் வினவினார். நீங்கள் திருமணம் செய்யும் போது, என்ன அன்பளிப்புப்பொருட்கள் பெற்றீர்கள்? திருமணம் எவ்வாறு நடைபெற்றது என்று கேட்டதற்கு பாட்டியார் கூறியதாவது:

"அப்போது வறுமை. ஒலிப்பதிவு நாடா கருவி இல்லை. VCD இல்லை. திருமணம் செய்யும் நாளில், மணமகன், குதிரை வண்டியில் பத்து கிலோமீட்டருக்கு மேலான வழியில் Dong Bu La என்னும் ஒரு வகை இசைக்கருவியை இசைத்த வண்ணம், என் வீட்டிற்கு வந்து என்னைத் திருமணம் செய்தார்" என்றார்.

அவர்களின் திருமண விழாவை விட, அவர்களின் மகன் அப்லேமிஜிதியின் திருமண விழா விமரிசையானது. அப்போது முழு கிராமத்திலும் மிகவும் சிறந்த திருமண விழா அதுவாகும். அப்லேமிஜிதி இது பற்றி கூறியதாவது:

"நான் 1985ம் ஆண்டில் திருமணம் செய்தேன். எங்கள் இனத்தின் பழக்க வழக்கங்களின் படி, அன்பளிப்புப் பொருட்களாக, மணமகள் குடும்பத்துக்கு போர்வை முதலியவற்றை வழங்கினேன். அப்போது தலைசிறந்த துணியைக் கொண்டு மணமகளுக்கு புது ஆடையை தைக்கச் செய்தேன்" என்றார்.

இருப்பினும், அப்லேமிஜிதிக்கு வருத்தம் உண்டு. அப்போது, தங்க மோதிரத்தை மணமகளுக்குக் கொடுப்பதென்ற பழக்கம் உருவாயிற்று. ஆனால், அதை வாங்குவதற்கு பணமில்லை. இப்போது வாழ்க்கை சீராகியுள்ளது. தங்க மோதிரத்தையும் வாங்கி தந்துள்ளதாக அவர் கூறினார்.

திருமண விழாவில் பங்கெடுக்கும் இளைஞர்கள் குறைவல்ல. அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டேவுள்ளனர். இன்றையத் திருமண விழாவில் கலந்து கொள்ளும் அதே வேளையில், நாளைய திட்டத்தை தத்தமது மனதில் கொள்கின்றனர். மணமகனின் தம்பி அயிதினுக்கு வயது 22. காதலித்துத் திருமணம் செய்யும் வயது, இது தானே. ஆனால் வேறு பலரின் கருத்திலிருந்து வேறுபட்ட எண்ணத்தை அவர் தெரிவித்தார். செய்தியாளரிடம் பேசுகையில், தமது திருமண விழாவில் புது அம்சத்தைச் சேர்க்க விரும்புவதாக அவர் கூறினார்.

"2008ம் ஆண்டு திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளேன். மனைவியுடன் பெய்சிங் சென்று, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைக் கண்டுரசிக்க வேண்டும்" என்றார்.

மூன்று தலைமுறை உஸ்பேக் இனத்தவர்களின் திருமண விழாக்களில் இவ்வளவு மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உஸ்பெக் இன மக்களின் வாழ்க்கைத் தரத்தில் நாளுக்கு நாள் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இவை வெளிப்படுத்துகின்றன.


1 2 3