• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-22 15:29:24    
சீன ஒட்டுமொத்த கட்டுப்பாட்டின் முன்னேற்றம்

cri

2006ம் ஆண்டு, சீனாவின் 11வது தேசிய சமூகப் பொருளாதார வளர்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது ஆண்டு ஆகும். இவ்வாண்டின் சீனப் பொருளாதாரத்தில், வேகமான அதிகரிப்பும், ஒட்டுமொத்தக் கட்டுப்பாடும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

 

கடந்த நவம்பர் 15ம் நாள், சீன மத்திய வங்கியான சீன மக்கள் வங்கி, வணிக வங்கிகளின் கையிருப்புத் தொகை விகிதத்தை 0.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2006ம் ஆண்டில் கையிருப்புத் தொகை விகிதத்தை அதிகரித்தது, இது மூன்றாவது முறையாகும். அதன் மொத்தம் அதிகரிப்பு, 1.5 விழுக்காட்டை எட்டியுள்ளது. தவிர, வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம், இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. நாணயக் கொள்கைகளை அடிக்கடி பயன்படுத்தி, பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவது, சீனாவில் முன்கண்டிராதது.

2006ம் ஆண்டில் சீனாவின் பொருளாதாரம், வேகமாக வளர்ச்சியடைந்தது. முதலாவது காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு, 10.3 விழுக்காடு அதிகரித்தது. தொழில் நிறுவனங்களின் நலன் தொடர்ந்து அதிகரித்து, நகரவாசிகள் மற்றும் கிராமவாசிகளின் நுகர்வுச் செலவு நிதானமாக விரிவடைந்தது. ஆனால், வேகமான அதிகரிப்புடன், இடர்பாடும் காணப்பட்டது. கடனை தாறுமாறாக வழங்குவது, முதலீடு, அளவுக்கு அதிகமாக அதிகரிப்பது, சாதகமான வர்த்தக நிலுவை அதிகரிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளால், முலவளப்பொருட்கள் மற்றும் எரியாற்றல் பற்றக்குறை, பண வீக்கம் ஆகிய பிரச்சினைகளை, சீனாவின் பொருளாதாரம் எதிர்நோக்குகிறது.

சீனச் சமூக அறிவியல் கழகத்தைச் சேர்ந்த நாணய ஆய்வகத்தின் ஆய்வாளர் YIN JIAN FENG எமது செய்தியாளருக்குப் பேட்டி அளிக்கையில், கையிருப்புத் தொகை விகிதச் சரிப்படுத்தல் முதலிய நாணயக் கொள்கைகள், 2006ம் ஆண்டின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டின் தனிச்சிறப்பாகும். முதலீடு அளவுக்கு மீறி வேகமாக அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவது, அதன் நோக்கமாகும் என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:

வணிக வங்கிகள் கடன் வழங்குவதையும், வேகமான முதலீட்டு அதிகரிப்பையும் கட்டுப்படுத்தும் பொருட்டு, சீன மக்கள் வங்கி, கையிருப்புத் தொகை விகிதத்தை அதிகரிக்கும் கொள்கைகளை அடுத்தடுத்து வெளியிட்டுள்ளது. இது, வணிக வங்கிகளுக்கும் முதலீட்டு தரப்புகளுக்கும் அளிக்கும் தகவல் ஆகும். அதாவது, பொருளாதாரம் அளவுக்கு மீறி வளர்ச்சியடைந்த போது, அரசு, கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு, பிரச்சினையைத் தீர்ப்பது உறுதி என்றார் அவர்.

1 2 3