சீனத்தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த கமிட்டியைச் சேர்ந்த ஒட்டுமொத்த பொருளாதார ஆய்வகத்தின் துணைத் தலைவர் MA XIAO HE பேசுகையில், நகரவாசிகள் குறிப்பாக விவசாயிகளின் நுகர்வை மேலும் விரிவாக்கி, கிராமங்களில் சமூகப் பணியையும், பொது சேவையையும் விரைவாக வளர்ப்பது, உள் நாட்டுத் தேவையை விரிவுபடுத்துவதற்கு மிகவும் முக்கியமானது என்று கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
தற்போது, சீனாவின் நகரங்களுக்கும் கிராமங்களுக்குமிடையிலான இடைவெளி, அடிப்படை வசதி கட்டுமானத் துறையில் பிரதிபலிக்கப்பட்டது. அதாவது, கிராமங்களில், நெருஞ்சாலை, குடி நீர், மின்னணு வினியோகம், எரிவாயு, வானொலி, தொலைத்தொடர்பு முதலிய சாதனங்கள், நகரங்களில் இருந்ததை விட மேம்பட்டிருக்கவில்லை என்றார் அவர்.
வர்த்தகத்தில் பெருமளவிலான சாதகமான நிலுவை, சீனப்பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சியைப் பாதிக்கும் மற்ற முக்கிய பிரச்சினையாகும். இது குறித்து, 2007ம் ஆண்டில், எரியாற்றல் செலவு உயர்வான, தூய்மைக்கேடு மிக்க மற்றும் மூலவள உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி வரியை சீனா தொடர்ந்து குறைத்து, தற்சார்பு அறிவுச்சார் சொத்துரிமையுடைய உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி வரியை உயர்த்தும்.
2007ம் ஆண்டில், நுகர்வு, முதலீடு மற்றும் ஏற்றுமதியின் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தி, பொருளாதார அதிகரிப்பு வேகத்தை நிலைநிறுத்துவதோடு, பொருளாதார அதிகரிப்பின் தரத்தையும் பயனையும் நாட விரும்புவது, சீன ஒட்டுமொத்த கட்டுப்பாட்டு பணியின் முதன்மைப்பணியாகும். 1 2 3
|