• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-22 15:29:24    
சீன ஒட்டுமொத்த கட்டுப்பாட்டின் முன்னேற்றம்

cri

வீடு மற்றும் நில உடைமைத்துறை, சீனாவின் நிலையான சொத்துக்களிலான மூதலீட்டை மேம்படுத்தும் முக்கியத் துறைகளில் ஒன்றாகும். கடந்த ஆண்டில், சீனாவில் பல்வேறு இடங்களில் வீட்டு விற்பனை விலை தொடர்ந்து அதிகரித்ததால், வீடு மற்றும் நில உடைமைத்துறையிலான முதலீடும், வீட்டுக்கான கடனும் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதில் மாபெரும் நிதி ஆபத்து காணலாம். அதே வேளை, அதிகமான வீட்டு விலை, மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.

சீன அரசு இதில் கவனம் செலுத்தி வருகிறது. நடு மற்றும் சிறிய ரக வீட்டு வினியோகக் கட்டமைப்பை உயர்த்துவது முதலிய ஆறு கட்டுப்பாட்டுக் கொள்கைகளை, தொடர்புடைய வாரியங்கள் வெளியிட்டுள்ளன. வீடு மற்றும் நில உடைமைத்துறையில் முறைகேடுகளை ஒடுக்கி, வீட்டு வினியோகக் கட்டமைப்பை மாற்றி, தொழில் நிறுவனங்கள் கடன் பெறும் நிபந்தனை, நடுத்தர மற்றும் குறைவான வருமானமுடைய மக்களுக்கான வீட்டு உத்தரவாதத்தைப் பெருக்குவது ஆகியவை, இவ்வாண்டில், வீடு மற்றும் நில உடைமைத்துறை ஒட்டுமொத்த கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி தீர்க்க வேண்டிய பிரச்சினைகளாகும்.

2006ம் ஆண்டில், சீனப்பொருளாதார அதிகரிப்பை மேம்படுத்துவதிலான நுகர்வின் பங்கு மேலும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, வீடுகள், வாகனம், தொலைத்தொடர்பு, கணிணி, கல்வி முதலிய துறைகளில், சீன மக்களின் நுகர்வு உயர்ந்து வருகிறது. இவ்வாண்டில், சமூக நுகர்வு பொருட்களின் மொத்த விற்பனைத் தொகை, ஏழு லட்சத்து 50 ஆயிரம் கோடி யுவானை எட்டி, 13 விழுக்காடு அதிகரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

தியான் சின் முதலாவது வாகன விற்பனைத் தொழில் நிறுவனத்தின் தலைமை மேலாளர் SONG MING JUN பேசுகையில், கார் வாங்குதலில், சீன மக்கள் மேலும் அதிகமாக நுகர்வு செய்தனர் என்று குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:

தொடர் உருமானமுடைய பொது மக்களில் மென்மேலும் அதிகமானோர், சிக்கன ரக காரை ஆக்கப்பூர்வமாக வாங்கத் துவங்கினர். தவிர, கிராமங்களில், கிராம வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார் அவர்.

ஆனால், தற்போது, முதலீடு, சீனப்பொருளாதாரத்துக்கான முக்கிய இயக்கு ஆற்றலாக விளங்குகின்றது. நகர மற்றும் கிராம மக்கள், குறிப்பாக விவசாயிகளின் வருமானம் மற்றும் நுகர்வு ஆற்றலை உயர்த்தி, வேலையற்ற குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று, அண்மையில் நடைபெற்ற மத்திய பொருளாதார பணிக்கூட்டம், இது குறித்து முன்வைத்துள்ளது.

1 2 3