• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-28 09:31:00    
சீனாவில் இணக்கமான சமூகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள்

cri

கடந்த ஆண்டு, சீனப் பொருளாதாரம் தொடர்ந்து விரைவாக அதிகரித்து வந்தது. முதல் மூன்று காலாண்டுகளில், மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு, 10.7 விழுக்காடு அதிகரித்தது. இருந்த போதிலும், கடந்த ஆண்டு சீனாவில் மக்களின் மிக கவனத்துக்குரிய முன்னேற்றம், பொருளாதார ரீதியில் இல்லை. பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேளையில், இணக்கமான சமூகத்தை உருவாக்குவது என்ற குறிக்கோளை அரசு மேலும் தெள்ளத்தெளிவாக முன்வைத்ததும், இக்குறிக்கோளை நனவாக்க பாடுபடுவதும் இம்முன்னேற்றமாகும். தற்போது, இம்முயற்சிகளின் பயன்கள் சில துறைகளில் காணப்பட்டுள்ளன.

30 வயதான Sun Jian Hua, கிழக்கு சீனாவின் Shan Dong மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஆவார். கடந்த எட்டு ஆண்டுகளில், இதர மாநிலங்களில் உள்ள பெரிய நகர்களில் அவர் வேலை செய்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளாக, நகர்களுக்குச் சென்று வேலை செய்யும் விவசாயிகளுக்கான கொள்கையை அரசு வகுத்துள்ளது. அவரின் திங்கள் வருமானம், சில நூறு யுவானிலிருந்து ஈராயிரம் யுவானாக அதிகரித்துள்ளது. ஆனால், Sunக்கு கவலை இன்னமும் நீடிக்கிறது. அதாவது மருத்துவ சிகிச்சை கட்டண செலவாகும். இருந்தாலும், அவரின் கவலை விரைவில் நீங்கிவிடலாம். பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் அதே வேளையில், சில காப்புறுதி அமைப்பு முறைகள் முழுமையாக இல்லை என்பது, வட்டாரங்களுக்கிடையிலான வளர்ச்சி இடைவெளி அதிகரிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளில் சீன அரசு கவனம் செலுத்தியுள்ளது. சமூகத்தின் சீரான வளர்ச்சியைத் தூண்டும் பொருட்டு, சோஷலிச இணக்கச் சமூகத்தை உருவாக்குவது பற்றிய நெடுநோக்குத் திட்டத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன் முன்வைத்தது. கடந்த ஆண்டு நடைபெற்றச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 16வது மத்தியக் கமிட்டியின் 6வது முழு அமர்வில், இணக்கமான சமூகத்தை உருவாக்குவது என்ற தீர்மானம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. இணக்கமான சமூகத்தை உருவாக்குவதற்கு, மக்களின் உரிமை மற்றும் நலன் உரிய முறையில் மதிக்கப்பட்டு, உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். நகர்களிலும் கிராமங்களிலும் வாழும் மக்களுக்கான சமூகக் காப்புறுதி முறைமை அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். வளர்ச்சியில் நகரங்களுக்கும் கிராமங்களுக்குமிடையிலும் வட்டாரங்களுக்கிடையிலும் அதிகரித்து வரும் இடைவெளியைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும். அடிப்படை பொதுச் சேவை முறைமையை மேலும் முழுமையாக்க வேண்டும். சீனர்கள் அனைவரின் சிந்தனை மற்றும் ஒழுக்க நெறி அறிவும், அறிவியல் மற்றும் பண்பாட்டு அறிவும் பெருமளவில் உயர்த்தப்பட வேண்டும். இயற்கைச் சூழல் தெள்ளத்தெளிவாக மேம்பட வேண்டும்.

1 2 3