சீன வேளாண் அமைச்சகமும் விபரமான திட்டத்தை வகுத்துள்ளது. பல்வேறு துறைகளில், பொருளாதாரம் வளர்ச்சி அடையாத மேற்கு பகுதியின் கிராமங்களுக்கு முக்கியமாக ஆதரவளிக்கும். இப்பகுதியின் கிராமங்கள் தனிச்சிறப்பியல்புடையத் தொழில்களை நாடுவதற்கு உதவி அளித்து, மேம்பாடுடையத் தொழில்களை வளர்ப்பதன் மூலம் இப்பிரதேசத்தில் உள்ள புதிய கிராமங்களின் உருவாக்கத்தை விரைவுபடுத்தி, இப்பகுதிக்கும் கிழக்கு பகுதிக்கும் இடையிலான இடைவெளி குறைக்கப்படும்.
தவிர, இதர துறைகளிலான கட்டுமானத்தை வலுப்படுத்தும் பொருட்டு, சீன அரசு பல கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உரிமையை பேணிக்காக்கும் சட்ட அமைப்புமுறை உருவாக்கத்தை வலுப்படுத்துவது, கல்வி அமைப்பு முறையை மேம்படுத்தி, மக்களின் கல்வி அறிவு தரத்தை உயர்த்துவது, பொதுச் சேவை முறைமை உருவாக்கத்தை வலுப்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.
பல்வேறு கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளின் நடைமுறையாக்கத்துடன், பூர்வாங்க பயன் காணப்பட்டுள்ளது. பெய்சிங் மாநகரின் மேற்கு பகுதியில் உள்ள Lu Gu குடியிருப்பு பிரதேசத்தில் வாழ்கின்ற 77 வயதான ZHUANG YUE HUI, பணியிலிருந்து ஓய்வு பெற்ற படைவீரராவார். இந்நடவடிக்கைகளிலிருந்து அவர் நலன் பெற்றுள்ளார். அவர் பெற்ற ஓய்வூதியத்தொகை, 200க்கு அதிகமான யுவானை அதிகரித்துள்ளது. அவர் மிகவும் மகிழ்ச்சியடைகின்றார். அவர் கூறியதாவது:
"எனக்கு மிக மகிழ்ச்சி. ஓய்வூதியத்தை அதிகரித்திருப்பதால், முதுமைக்கால வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்த முடியும். எங்கள் வாழ்க்கை மேலும் செல்வமடையும்" என்றார், அவர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் கட்சிக் கல்லூரிப் பேராசிரியர் WU ZHONG MIN பேசுகையில், இணக்கமான சமூகத்தை உருவாக்க, அரசு பல்வகை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வளர்ந்து வரும் போக்கில், பொருளாதார பயனையும், சமூக நேர்மையையும் சீனா கருத்தில் கொள்வதை இது வெளிப்படுத்துகின்றது. இந்த கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம், விரைவில், சீனச் சமூகத்தில், இணக்கமான ஒலி எங்கும் கேட்கலாம் என்றார். அவர் மேலும் கூறியதாவது:
"சமூகத்தில் மிகப் பல உறுப்பினர்கள், சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சியின் கனியை கூட்டாக அனுபவிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. இப்போது, சமூக நேர்மையை, மேலும் முக்கியமான இடத்தில் வைக்க வேண்டும் என்று குறிப்பாக வலியுறுத்துகின்றது. இது, மிக முக்கியமான முன்னேற்றம்" என்றார், அவர். 1 2 3
|