• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-28 09:31:00    
சீனாவில் இணக்கமான சமூகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள்

cri

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் கட்சி கல்லூரிப் பேராசிரியர் Ye Du Chu பேசுகையில், சோஷலிச இணக்கச் சமூகத்தை உருவாக்குவதில், சமூகக் காப்புறுதியை மேம்படுத்துவது, மக்களின் உரிமைக் காப்புறுதியில் முக்கிய உள்ளடக்கமாகும் என்று கூறினார். சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு பணி நடைமுறைக்கு வந்த 20 ஆண்டுகளுக்கு மேலான காலத்தில், அடிப்படை முதுமைக்கால காப்பீட்டு அமைப்பு முறை, அடிப்படை மருத்துவக் காப்பீட்டு அமைப்பு முறை, வேலையின்மைக் காப்பீட்டு அமைப்பு முறை உள்ளிட்ட காப்புறுதி அமைப்பு முறைகள் பூர்வாங்க முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், காப்புறுதித் தரமும், பரவல் அளவும் தாழ்ந்தவை. சீனாவின் உழைப்பு மற்றும் காப்புறுதி அமைச்சகம் இதற்கானத் தீர்வு முறையை நாடி வருகின்றது. சீனத் துணைத் தலைமையமைச்சர் Huang Ju கூட்டம் ஒன்றில் கூறியதாவது: 

"சமூகக் காப்புறுதி அமைப்பு முறையில் நிலவும சில முக்கிய  பிரச்சினைகளை நாங்கள் ஆராய்ந்து தீர்த்து, நீண்டகால பயன் தரும் அமைப்பு முறையை உருவாக்கி, தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்க வேண்டும். சமூகக் காப்புறுதியை மேலதிக மக்கள் அனுபவிக்கத் துணை புரியும் பொருட்டு, பரவல் அளவை விரிவாக்க பாடுபட வேண்டும். மேலும் கூடுதலான மக்கள் சமூக காப்புறுதியை பெற வாய்ப்பை அளிக்க வேண்டும். பல வழிகள் மற்றும் அமைப்பு முறைமயமாக்கச் சொத்து ஊற்றுமூலத்தை உருவாக்க வேண்டும். நிதிகள் மீதான நிர்வாக நிலையை உயர்த்தி, இடர்பாட்டை உரிய முறையில் குறைக்க வேண்டும். சமூகக் காப்புறுதி லட்சியம் மீதான நிர்வாகத்தை வலுப்படுத்தி, பொது மக்களுக்குத் தரமிக்கச் சேவையை வழங்க வேண்டும்"என்றார், அவர்.

சீனாவில் இணக்கமான சமூகத்தை உருவாக்குவதில், நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலும், வட்டாரங்களுக்கிடையிலும் சமனற்ற வளர்ச்சி நிலை, அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகும். இதற்காக, மேற்கு பகுதி மீதான நிதி ஆதரவை சீன அரசு மேலும் அதிகரித்து, அப்பகுதிக்கான வளர்ச்சியையும், வட கிழக்கு சீனாவின் பழம்பெரும் தொழில் தளம் மீதான சீரமைப்பையும் வலுப்படுத்தியுள்ளது. ஒதுக்குப்புற மலை பிரதேசத்தில் வாழும் சிறுபான்மை தேசிய இன மக்களுக்காக, சிறப்பான உதவி நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. சீனத் தேசிய இன விவகார ஆணையகத்தின் பொருளாதார துறையின் துணைத் தலைவர் Le Chang Hong பேசுகையில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள், மக்கள் தொகை ஒரு லட்சத்துக்கு குறைவாக உள்ள சிறுபான்மை தேசிய இனங்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலையை மேம்படுத்த, 100 கோடி யுவானை அரசு ஒதுக்கீடு செய்யும் என்றும், இனிமேல், இத்துறைக்கான ஆதரவு விரிவாக்கப்படும் என்றும் கூறினார்.

1 2 3