• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-05 16:37:17    
சர்வதேச பசுங்கூட வாயுக்களின் வெளியேற்ற உரிமைப் பரிமாற்றத்தில் சீனா பங்குகொள்வது

cri

கடந்த சில ஆண்டுகளில் பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தினால் உருவான உலக வெப்ப ஏறல் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தை வளர்ச்சி அடைந்த நாடுகள் படிப்படியாகக் குறைக்க வேண்டும். ஆனால், வளரும் நாடுகள் தற்காலிகமாகக் கோரப்படவில்லை என்பது 2005ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரத் துவங்கிய கியோட்டோ உடன்படிக்கையில் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலைமையில், தூய்மை மேம்பாட்டு அமைப்பு முறை என்று அழைக்கப்படும் பசுங்கூட வாயுக்களின் வெளியேற்ற உரிமை பரிமாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலக வெப்ப ஏறல் பிரச்சினையைக் கையாளும் பயனுள்ள வழி முறை இது என்று கருதப்படுகின்றது.

கடந்த ஆண்டின் செப்டெம்பர் திங்களில் உலக வங்கி மூலம் இத்தாலிய கரியமில நிதியமும் சீனாவின் சியாங்சு மாநிலத்து நான்ஜிங் இரும்புருக்குத் தொழில் நிறுவனமும் கரியமில வாயு வெளியேற்ற உரிமை பரிமாற்ற உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. இதனால், கொன்வட்டர் எனப்படும் நிலக்கரி வாயுவைத் திரும்பப் பெறும் முன்னேறியத் தொழில் நுட்பத்தை நான்ஜிங் இரும்புருக்குத் தொழில் நிறுவனம் பெற்றுள்ளது. இத்தாலிய கரியமில நிதியம், அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் டன் கரியமில வாயுவை வெளியேற்றும் உரிமை பெற்றுள்ளது. இந்தத் திட்டப் பணியினால், வார்ப்புருக்குப் போக்கில் ஏற்படும் நிலக்கரி வாயுவின் வெளியேற்றத்தைத் திரும்பப் பெற்று, அதைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரியாற்றல் சிக்கனம் ஆகிய இரண்டு பயன் தரப்படும் என்றும் நான்ஜிங் இரும்புருக்கு தொழில் நிறுவனத்தின் வளர்ச்சித் துறைத் தலைவர் லியூ யுயெ ஜியெ எமது செய்தியாளரிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

இதன் மூலம் எங்கள் தொழில் நிறுவனம் 3 கோடியே 20 லட்சம் ரென்மின்பி யுவான் பயன் பெறலாம். அத்துடன், இரண்டு கொன்வட்டர்களைக் கணக்கு பார்த்தால், நிலக்கரி வாயு வெளியேற்றத்தை மின்னாற்றலாய் மாற்றுவதன் மூலம் ஆண்டுக்கு 15 கோடி கிலோவாட் மணி மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இரும்புருக்குத் தொழில் நிறுவனங்களில் இது முன் மாதிரியாகத் திகழ்கின்றது என்றார் அவர்.

1 2 3