கியோட்டோ உடன்படிக்கையில் இடம்பெறும் தூய்மை மேம்பாட்டு அமைப்பு முறைக்கிணங்க, சீன அரசு ஒப்புதல் அளித்த முதலாவது தொழிற்துறை எரியாற்றல் சிக்கனத் திட்டப்பணி இதுவாகும். 2008ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை, வளர்ச்சியடைந்த 35 நாடுகளின் கரியமில வாயு, methane உள்ளிட்ட பசுங்கூட வாயுக்களின் வெளியேற்ற அளவு, 1990ஆம் ஆண்டில் இருந்ததை விட 5.2 விழுக்காடு குறைக்க வேண்டும். வரையறையை மீறி வெளியேற்றினால், கடும் தண்டனை விதிக்கப்படும் என்று கியோட்டோ உடன்படிக்கை கூறுகிறது. பசுங்கூட வாயுக்கள் பரவும் தன்மையுடையவை. பசுங்கூட வாயுக்களின் வெளியேற்ற அளவைக் குறைப்பதில் வளர்ச்சியடைந்த நாடுகளின் செலவு அதிகம். இவற்றின் காரணமாக, தூய்மை மேம்பாட்டு அமைப்பு முறை எனப்படும் வளைந்து கொடுக்கும் முறைமையைச் சர்வதேசச் சமூகம் நிறுவியுள்ளது. அதாவது, வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்குமிடையில் பசுங்கூட வாயுக்களின் வெளியேற்ற உரிமை பரிமாற்றம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு நிதி மற்றும் தொழில் நுட்பத்தை வழங்கி, பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்க வல்ல திட்டப்பணிகளின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிப்பதோடு, பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கும் அளவையும் விலைக்கு வாங்க வேண்டும். இத்திட்டப்பணி ஒத்துழைப்பு மூலம் வளரும் நாடுகள் தொடர வல்ல வளர்ச்சியை எட்டலாம் என்றும் இந்தப் பரிமாற்றத்தில் கோரப்பட்டுள்ளது. சுருங்கக் கூறின், பசுங்கூட வாயுக்களின் வெளியேற்ற அளவைக் குறைப்பதில் வளரும் நாடுகளுக்கு வளர்ச்சியடைந்த நாடுகள் நிதியுதவியளிப்பதன் மூலம், குறிப்பிட்ட அளவு பசுங்கூட வாயுக்கள் வெளியேறும் உரிமையை அவை பெற்றுள்ளன.
உலகில் அதிக உள்ளார்ந்த ஆற்றல் வாய்ந்த சந்தைகளில் ஒன்றாகச் சீனா திகழ்கின்றது என்று சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தைச் சேர்ந்த உலகச் சுற்றுச்சூழல் அலுவலகத்தின் துணைத் தலைவர் lv xue dou கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,
எரியாற்றல் சிக்கனத்துறை, புதுப்பிக்க வல்ல எரியாற்றல் துறை, நிலக்கரி வாயு மற்றும் methane வாயுவைத் திரும்பப் பெறுவது ஆகியவற்றில் சீனாவில் அதிகமான வணிக வாய்ப்புகளைக் கண்டறியலாம் என்றார் அவர்.
1 2 3
|