சர்வதேச விதிகளின் படி, பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பது பற்றிய ஒத்துழைப்புத் திட்டப்பணிக்கிணங்க, ஆயிரம் கிலோகிராம் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க, வளரும் நாடுகளின் தொழில் நிறுவனத்துக்குச் சுமார் 10 அமெரிக்க டாலரை வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழில் நிறுவனம் வழங்க வேண்டும். பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பது பற்றிய திட்டப்பணியில் குறைந்தது 1000 கோடி அமெரிக்க டாலருக்கு அதிகமான சந்தை வாய்ப்பு சீனாவுக்கு உண்டு என்று நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பது பற்றிய திட்டப்பணியில் சீனாவுக்கு அதிக உள்ளார்ந்த வாய்ப்பு உண்டு. இருப்பினும், இதைப் பரவலாக்குவதற்கு முயற்சி தேவை.
பரிமாற்ற விதி பற்றி சீனத் தொழில் நிறுவனங்கள் மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது என்று ஸ்சுவான் மாநிலத்து, தூய்மை மேம்பாட்டு அமைப்பு முறை மையத்தின் துணைத் தலைவர் சன்கௌஃபுன் கூறினார். அவர் கூறியதாவது,
தற்போது அதிகமான இடைநிலை முகவர் நிறுவனங்களும் சில நிபுணர்களும் இத்திட்டப்பணியில் பங்குகொள்ள வேண்டும். தூய்மை மேம்பாட்டு அமைப்பு முறைத் திட்டப்பணி சீனாவில் வளர்வதை மட்டுபடுத்தும் காரணி இது என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது சீனாவின் ஸ்சுவான், சாங்துங், சியாங்சு ஆகிய மாநிலங்களில், பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கும் சிறப்புத் திட்டப்பணி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. தொடர்புடைய திட்டப்பணியில் பங்குகொள்ள விண்ணப்பித்த தொழில் நிறுவனங்களுக்கு நிதி மற்றும் தொழில் நுட்ப உதவியளிக்க, உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் இம்மையங்கள் ஒத்துழைக்கின்றன.
2012 ஆம் ஆண்டு முதல், பசுங்கூட வாயுக்களின் வெளியேற்ற உரிமைப் பரிமாற்றத்தில் வளரும் நாடுகள் தொடர்ந்து பங்குகொள்ள முடியுமா என்பது, 2வது கட்டக் கியோட்டோ உடன்படிக்கைப் பேச்சுவார்த்தையைப் பொறுத்து அமையும்.
நேயர்கள் இதுவரை, சர்வதேச பசுங்கூட வாயுக்களின் வெளியேற்ற உரிமை பற்றிய பரிமாற்றத்தில் சீனா பங்குகொள்வது பற்றி கேட்டீர்கள். இத்துடன் மக்கள் சீனம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது. 1 2 3
|