கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் பண்பாட்டுத் துறை விறுவிறுப்பாக வளர்ந்துவருகின்றது. சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த பண்பாட்டுப் பொருட்கள் சில, உள் நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டுச் சந்தைகளிலும் வரவேற்கப்பட்டுள்ளன. சீனப் பொருளாதார வளர்ச்சியுடனும் உலக மயமாக்கத்துடனும் சீனத் திரைப்படம், நூல், கலை நிகழ்ச்சி அரங்கேற்றம் ஆகியவற்றைக் கண்டுகளிக்கும் கூடுதலான வாய்ப்புகள் வெளிநாட்டினர்களுக்குக் கிடைத்துள்ளன.
கடந்த ஆண்டின் இறுதியில், பெய்சிங் மாநகரில் முதலாவது சர்வதேசப் பண்பாட்டுப் புத்தாக்கத் தொழில் பொருட்காட்சி நடைபெற்றது. இதில் பங்கு கொண்ட பல நிறுவனங்கள் தத்தமது தனிச்சிறப்பு வாய்ந்த பண்பாட்டுப் பொருட்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களுக்குக் காண்பித்து விருந்து அளித்தன. வட கிழக்கு சீனாவின் ஜிலின் மாநிலக் காட்சியகத்தில் zhong zheng பண்பாட்டுக் குழுமத்தைச் சேர்ந்த கலை நிகழ்ச்சி அரங்கேற்றக் குழு உறுப்பினர்கள், குசெங் என்னும் ஒரு வகை பண்டைக் கால இசைக் கருவியை இசைத்த போது, அது பலரின் கவனத்தை ஈர்த்தது. வெளிநாடுகளின் அரங்கேற்ற நிறுவனங்கள் பல, சீனத் தேசிய இசை மீது மிகுந்த அக்கறை காட்டியுள்ளனர் என்று இக்குழுமத்தின் தலைமை மேலாளர் வாங் குவான்மிங் எமது செய்தியாளரிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது,
இம்முறை ஜிலின் மாநிலத்தின் சார்பில் பொருட்காட்சியகத்தில் பங்குகொள்கிறோம். அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளின் அரங்கேற்ற நிறுவனங்களும் நாங்களும் பூர்வாக ரீதியில் உடன்பாட்டுக்கு வந்துள்ளோம். அதாவது, தத்தமது நாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதோடு அவற்றைக் கற்றுக்கொடுக்கவும் எங்களுக்கு அழைப்பை விடுத்தன என்றார் அவர்.
1 2 3
|