• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-12 16:40:45    
உலகச் சந்தையில் விற்பனையாகும் சீனப் பண்பாட்டுப் பொருட்கள்

cri

தற்போது சீனப் பண்பாட்டுப் பொருட்கள் படிப்படியாகச் சர்வதேச் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது பற்றி சீனச் செய்தி தொடர்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வெளிநாட்டுப் பண்பாட்டு வர்த்தக ஆய்வகத்தின் தலைவர் லீ ஹுவெலியான் கூறியதாவது,

கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற 58வது FRANKFURT சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் சீனாவின் புத்தக மற்றும் பதிப்புரிமை விற்பனையில் முதல் முறையாக சாதக நிலுவைக் காணப்பட்டது. 600க்கும் அதிகமான புத்தகப் பதிப்புரிமைகள் விற்கப்பட்டன. இது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, கொண்டாடத் தக்க விஷயம் ஆகும் என்றார் அவர்.

கடந்த சில ஆண்டுகளில் உலகச் சந்தையில் சீனப் பண்பாட்டுப் பொருட்கள் நுழைந்த போதிலும் அவற்றின் ஒட்டுமொத்தப் போட்டி ஆற்றல் வலிமையாக இல்லை. சீனப் பண்பாட்டுப் பொருட்களின் வணிக மயமாக்கம் தாமதமாகத் துவங்கியதே இதற்குக் காரணமாகும் என்று லீ ஹுவெலியான் கருத்து தெரிவித்தார். உள்ளடக்கம், வழி முறை ஆகியவை பற்றி சீனத் தொழில் நிறுவனங்கள் மேலும் நல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும். பண்பாட்டுப் பொருட்களின் உள்ளடக்கங்களில் சீனப் பண்பாட்டின் சிறந்த சாராம்சங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன், பொருட்களின் வடிவங்களும் வெளிநாட்டு ரசிகர்களின் கண்டுகளிப்பு வழக்கம், சர்வதேசச் சந்தையின் தனிச்சிறப்பு, விதி ஆகியவற்றுக்கு ஏற்றதாக அமைய வேண்டும். இவ்வாறு செய்தால் தான், சீனப் பண்பாட்டுப் பொருட்கள் அதிக அளவில் விற்கப்படும் என்று அவர் முன்மொழிந்தார்.

சீனப் பொருளாதார ஆற்றல் வலுப்படுவதன் மூலம், பல்லாயிரம் ஆண்டு வரலாறுடைய சீனாவின் சிறந்த பண்பாடு, மென்மேலும் அதிகமான வெளிநாட்டவர்களை ஈர்த்துவருகின்றது என்று அவர் சுட்டிக்காட்டினார். அவர் கூறியதாவது,

தற்போது உலகில் சீன மொழியைக் கற்கும் பேரெழுச்சி தோன்றியுள்ளது. வெளிநாடுகளிலும் கன்பியூசியஸ் கழகங்கள் பல உள்ளன. சீனத் தொழில் நிறுவனங்களின் சர்வதேச கருத்துணர்வு வலுப்படுவதோடு, சீனாவின் பொருளாதாரத் துறை போல, பண்பாட்டுத் தொழிலும் வேகமாக வளரும் என்பது உறுதி என்றார் அவர். .


1 2 3