• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-12 16:40:45    
உலகச் சந்தையில் விற்பனையாகும் சீனப் பண்பாட்டுப் பொருட்கள்

cri

சீனாவில் மிகவும் தொன்மை வாய்ந்த இசைக் கருவிகளில் ஒன்றான குசெங், சீன மக்களால் மிகவும் வரவேற்கப்படும் இசைக் கருவியாகும். கடந்த சில ஆண்டுகளில் zhong zheng குழுமத்தைச் சேர்ந்த கலை நிகழ்ச்சி அரங்கேற்றக் குழு, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட 30க்கும் அதிகமான நாடுகளில் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி, அந்நாடுகளில் பயிற்சி வகுப்புகளை நடத்தி, குசெங் இசைக் கருவியைப் பயன்படுத்துவது பற்றி வெளிநாட்டவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது.

வட சீனாவின் தியென்ஜின் மாநகர வணிகக் குழு, திருத்தியமைக்கப்பட்ட குசெங் இசைக் கருவியைக் கொண்டு இப்பொருட்காட்சியில் பங்குகொண்டது. பாரம்பரிய குசெங் இசைக் கருவியில் நிலவும் ஸ்வர ஒலி போதாது என்ற குறை திருத்தப்பட்ட இவ்விசைக் கருவியில் நீக்கப்பட்டுள்ளது. இதனால், பார்வையாளர்கள் இதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர். பொருட்காட்சி துவங்கிய முதல் நாளன்று, சுமார் 90 லட்சம் ரன்மின்பி யுவான் மதிப்புள்ள உடன்படிக்கைகள் ஏற்படுத்தப்பட்டன.

இப்பொருட்காட்சியில், ஷெங்சி மாநிலத்தின் தனித்துவம் வாய்ந்த நாட்டுப்புறப் பாடல், நடனம் முதலியவையும் பல ரசிகர்களை ஈர்த்துள்ளன.

பெய்சிங் பண்பாட்டுப் புத்தாக்கத் தொழில் பொருட்காட்சியில் வேறுபட்ட வகைகளான சீனத் தனிச்சிறப்புடைய பண்பாட்டுப் பொருட்கள் பல இடம்பெற்றன. சீனப் பண்பாட்டுத் தொழிலின் விறுவிறுப்பான வளர்ச்சியை இவை முழுமையாகப் பிரதிபலித்துள்ளன. பெய்சிங் மாநகரம் ஏற்பாடு செய்த இப்பொருட்காட்சி, சீனப் பண்பாடு உலகில் நுழைவதைத் தூண்டும் சிறந்த மேடையாக மாறியுள்ளது. பொருட்காட்சி மூலம் சீனப் பண்பாட்டுப் பொருட்களை மக்களுக்குக் காண்பிப்பது தவிர, சீனாவின் சில பிரதேசங்களில் பண்பாட்டுத் தொழிலின் வளர்ச்சிக்குத் துணை புரியும் வகையில், சில கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. எடுத்துக்காட்டாக, பெய்சிங் மாநகரில், வெளிநாட்டு நிபுணர்களை உட்புகுத்திய பண்பாட்டுப் புத்தாக்கத் தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவது, இத்தகைய தொழில் நிறுவனங்களின் வருமான வரியும் செயல்பாட்டு வரியும் குறைக்கப்படுவது அல்லது நீக்கப்படுவது. கடந்த ஆண்டு முதல், பண்பாட்டுப் புத்தாக்கத் தொழிலின் வளர்ச்சிக்கு ஆண்டுக்கு 50 கோடி யுவான் என்னும் சிறப்பு நிதி வழங்குவது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொடர்புடைய தொழில் நிறுவனங்களின் கலை நிகழ்ச்சி அரங்கேற்றம், நூல் வெளியீடு, விநியோகம், பதிப்புரிமை வர்த்தகம், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தயாரிப்பு, பரிமாற்றம், கார்டூன் திரைப்படம், இணைய விளையாட்டு ஆகியவற்றின் ஆராய்ச்சி, தயாரிப்பு ஆகியவற்றுக்கு இந்நிதித் தொகை பயன்படுத்தப்படும்.

1 2 3