• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-19 16:48:17    
விறுவிறுப்பாக வளரும் சீனாவின் சிக்கன ரக ஹோட்டல் துறை

cri

கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் சிக்கன ரக ஹோட்டல் துறை வேகமாக வளர்ந்துவருகின்றது. முன்னேறிய நிர்வாகக் கருத்தும் வழிமுறையும் கொண்ட தொழில் நிறுவனங்கள் சில, குறுகிய காலத்தில் லாபம் பெறத் துவங்கின. வேறு சில, வெளிநாட்டுப் பங்குச் சந்தைகளில் வெற்றிகரமாக நுழைந்துள்ளன. இவற்றுக்கு உலகளாவிய முதலீட்டாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சிக்கன ரக ஹோட்டல் என்றால், ஹோட்டல் நடத்துவோரின் செலவையும் விருந்தினர்களின் கட்டணத்தையும் சிக்கனப்படுத்தும் உணவகமாகும் என்பதாகும். அதற்கும் பாரம்பரிய நட்சத்திர ஹோட்டல், விலை மலிவான தங்கு விடுதி ஆகியவற்றுக்குமிடையில் பெரும் வித்தியாசம் நிலவுகின்றது. ஆடம்பரமான அலங்காரம், பல்வகை வசதிகள் ஆகியவற்றின் காரணமாக ஹோட்டல்களின் சேவையின் விலையும் அதிகமாகும். சாதாரணமான வசதிகளைக் கொண்ட ஹோட்டல்களின் விலை குறைவாக இருந்த போதிலும் அவற்றின் சுத்தம், வசதிகள் ஆகியவை விருந்தினர்களின் கோரிக்கையை நிறைவு செய்யவில்லை. ஆனால், சுத்தமான சுற்றுச் சூழலும் சொகுசமான படுக்கையும் உடைய சிக்கன ரக ஹோட்டல்கள், விருந்தினர்களின் மிக அடிப்படையான கோரிக்கையை நிறைவு செய்ய முடியும். இது அவற்றின் தனிச்சிறப்பு.

கடந்த நூற்றாண்டின் முடிவில் சீனாவின் சாங்ஹை மாநகரில் முதன் முதலில் சிக்கன ரக ஹோட்டல் நிறுவப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இத்தகைய ஹோட்டல்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகின்றது.

தற்போது சீனாவின் மிகப் பெரிய சிக்கன ரக ஹோட்டல் பல கிளைகளைக் கொண்ட சிங்காங் நட்சத்திரம் என்னும் ஹோட்டலாகும். அது, 1996ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அப்போது, சிக்கன ரக ஹோட்டல் பற்றி சீன மக்களில் மிகப் பெரும்பாலானோருக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால், சிங்காங் குழுமம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சீனாவில் முதலாவது சிக்கன ரக ஹோட்டலான சிங்காங் நட்சத்திர ஹோட்டல் குழுமத்தை நிறுவியது. அக்காலத்தில் சிக்கன ரக ஹோட்டலை நிறுவியதன் நோக்கம் பற்றி இக்குழுமத்தின் சந்தைப் பகுதித் தலைமை இயக்குநர் சாங்சே கூறியதாவது,

1 2 3