வெளிநாடுகளின் முன்னேறிய சிக்கன ரக ஹோட்டல்களைப் பார்வையிட்டோம். அப்போது சீனாவில் நட்சத்திர ஹோட்டல்கள் முக்கிய இடம் வகித்தன. சிக்கன ரக ஹோட்டல்கள் இல்லை. இதனால் சிக்கன ரக ஹோட்டலைத் துவக்கினோம். எங்களுடைய இவ்வழி முறை சரி என்பதைக் கடந்த சுமார் 10 ஆண்டு கால நடைமுறைகள் நிரூபித்துள்ளன என்றார் அவர்.
நீண்ட காலமாக சிங்காங் நட்சத்திர ஹோட்டல், விலை மலிவான தரமான சேவையைத் தன் அலுவலின் முக்கியப் பகுதியாகக் கொண்டுவருகின்றது. தேவையில்லாத கூட்டம் மற்றும் பொழுதுபோக்கிற்கான வசதிகள் பல நீக்கப்பட்டுள்ளன. விருந்தினர் அறைகளை சுத்தமாகவும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கச் செய்து, பயணியரின் மிக அடிப்படையான உறைவிடக் கோரிக்கையை நிறைவு செய்துள்ளதோடு, நிர்வாகச் செலவையும் பெரிதும் குறைத்துள்ளது.
1997ஆம் ஆண்டில், விருந்தினர்களுக்குச் சேவை புரியத் துவங்கிய 3 திங்களுக்குப் பிறகு, சிங்காங் நட்சத்திர ஹோட்டலிலுள்ள 90 விழுக்காட்டு அறைகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. 2003ஆம் ஆண்டில் சிங்காங் குழுமம், சாங்ஹை மாநகரின் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த மற்றொரு முக்கிய குழுமமான சின்யா குழுமத்துடன் இணைந்து, சிங்காங் சர்வதேசக் குழுமத்தை நிறுவியுள்ளதால், அலுவல் விரிவடைந்துள்ளது. தற்போது, சீனாவில் 100க்கும் அதிகமான சிங்காங் நட்சத்திர ஹோட்டல் கிளைகள் உள்ளன. அறைகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
சிங்காங் நட்சத்திர ஹோட்டலின் எதிர்கால வளர்ச்சித் திட்டம் பற்றி சாங்செ மேலும் கூறியதாவது,
2007ஆம் ஆண்டிற்குள் 250 கிளைகளையும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சுமார் 800 கிளைகளையும் நிறுவ வேண்டும் என்பது சிங்காங் நட்சத்திர ஹோட்டலின் குறிக்கோளாகும். எங்களுடைய விருந்தினர்களுக்குச் சிக்கன ரக ஹோட்டலின் தரமான சேவையை வழங்க முயன்றுவருகின்றோம் என்றார் அவர்.
1 2 3
|